

தங்கத்தின் விலையைக் கேட்டாலே ஷாக் அடிக்கும் வகையில் ஆகஸ்ட் மாதத்தில் தொடர் உயர்வை சந்தித்து வருகிறது. தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.5,840 உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் ரூ.2,000-க்கும் உயர்ந்தது.
ஆகஸ்ட் மாத இறுதிக்குள் தங்கம் விலை ரூ.1 லட்சத்துக்கும் கீழே செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் ராக்கெட் வேகத்தில் விலை உயர்ந்து வருகிறது.
நேற்றைய விலை நிலவரம்:
நேற்று (ஆகஸ்ட் 23) ஞாயிற்றுக்கிழமை என்பதால், தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் மாற்றமில்லாமல் விற்பனையானது.
தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.14,950-க்கும், ஒரு சவரன் ரூ.1,19,600-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் ரூ.270-க்கு விற்பனையானது.
இன்றைய நிலவரம்:
தங்க நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஆகஸட் 24) தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.640 உயர்ந்து, ரூ.1,20,240-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.80 உயர்ந்து ரூ.15,030-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து, ரூ.275-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.2,75,000-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் தொடர் விலையேற்றத்திற்கு இணையாக வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது. கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சற்று விலை சரிந்து, இல்லத்தரசிகளுக்கு ஆறுதல் அளித்தது.
ஆனால் ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் இருந்தே விலை உயர்ந்து மீண்டும் ஏறுமுகத்தில் செல்கிறது தங்கம் விலை. இந்த நிலை தொடர்ந்தால் விரைவில் தங்கம் விலை ரூ.1.50 லட்சத்தைக் கடந்து விடும் என்பதில் ஐயமில்லை.
கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:
ஆகஸ்ட் 23: 1 கிராம் - ரூ.14,950 1 சவரன் ரூ.1,19,600
ஆகஸ்ட் 22: 1 கிராம் - ரூ.14,950 1 சவரன் ரூ.1,19,600
ஆகஸ்ட் 21: 1 கிராம் - ரூ.14,850 1 சவரன் ரூ.1,18,800
ஆகஸ்ட் 20: 1 கிராம் - ரூ.14,600 1 சவரன் ரூ.1,16,800
ஆகஸ்ட் 19: 1 கிராம் - ரூ.14,400 1 சவரன் ரூ.1,15,200
கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விலை:
ஆகஸ்ட் 23: 1 கிராம் - ரூ.270
ஆகஸ்ட் 22: 1 கிராம் - ரூ.270
ஆகஸ்ட் 21: 1 கிராம் - ரூ.270
ஆகஸ்ட் 20: 1 கிராம் - ரூ.260
ஆகஸ்ட் 19: 1 கிராம் - ரூ.250
கடந்த 5 நாட்கள் விலையை ஒப்பிட்டுப் பார்த்தாலே தங்கம் மற்றும் வெள்ளி விலையின் ஏற்றத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும். கடந்த ஆண்டுடன் இன்றைய விலையை ஒப்பிட்டுப் பார்த்தால், அப்போதே தங்கத்தை வாங்கியிருக்கலாமே என்ற எண்ணம் தான் வரும். ஏனெனில் கடந்த ஆண்டு இதே தேதியில் ஒரு சவரன் தங்கம் ரூ.74,520-க்கும், ஒரு கிராம் வெள்ளி ரூ.128-க்கும் விற்பனையானது.
இதில் தங்கத்தின் விலை 50%-க்கும் மேல் உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை இரு மடங்கைக் காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் தங்கம் மற்றும் வெள்ளியை பாதுகாப்பான சிறந்த முதலீடாக இன்றளவும் இருக்கிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.