தினம் தினம், கொத்து கொத்தாக சுட்டு கொல்லப்படும் 3 லட்சம் நாய்கள்! எங்கே? ஏன்? எதற்காக?

Dogs
Dogs
Published on

நாய்கள் - எப்போதும் நன்றி மற்றும் விசுவாசத்தின் அடையாளங்கள்.

உலகில் மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்தே அவர்களுடன் பழகி இணைந்த முதல் விலங்கினம் நாய்கள் தான். ஆதி மனிதன் நாயை வேட்டையாடப் பயன்படுத்தினான். இதன் மூலம் மனித இனம் முதலாளித்துவத்தைக் கற்றுக் கொண்டது. வேட்டையாடிய நாய்கள் அந்த இரையை தாங்கள் தின்னாது, தங்களை வளர்க்கும் எஜமானர்களுக்கு கொண்டு வந்து கொடுக்கும். இரையில் பெரும்பாலான சதைப்பகுதி எல்லாம் மனிதன் தின்று விட்டு நாய்க்கு எலும்பை போட்டு வளர்த்தான்.

இன்று உலகம் பெருமளவில் மாறினாலும் மனிதனின் சுயநலம் மாறவில்லை. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவில் 30 லட்சம் தெரு நாய்களை கொல்ல அந்த நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. 30 லட்சம் என்பது மிகவும் அதிகப்படியான எண்ணிக்கை. இந்தளவுக்கு நாய்களை கொல்ல அவர்கள் கூறும் காரணம் மிகவும் சிறியது. மொராக்கோ நாடு வெளியிட்ட அறிக்கைகளின்படி, தங்கள் நாட்டு  நகரங்களை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்காக 30 லட்சம் தெரு நாய்களைக் கொல்ல பரிசீலித்து வருகிறது! 

Dogs
Dogs

மொராக்கோ 2030 ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பையை ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலுடன் இணைந்து நடத்த உள்ளது. இந்த மூன்று நாடுகளிலும் போட்டிகள் நடக்கும்; அதன் மூலம் அவர்கள் ஏராளமான சுற்றுலாப் பயணிகளைக் கவருவார்கள். ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்த உலகக் கோப்பை போட்டியைக் காண உலகம் முழுவதிலுமிருந்து கோடிக்கணக்கான ரசிகர்கள் வருகை தருவார்கள். இந்த உலகக் கோப்பை போட்டிகளை நடத்த மொராக்கோ தயாராகி வருகிறது.

இதையும் படியுங்கள்:
பூமியில் மூன்றில் ஒரு பங்கு வனப்பகுதி! அழிவதோ, ஆண்டொன்றுக்கு முப்பது மில்லியன் ஏக்கர்!
Dogs

உலகக் கோப்பைக்கு முன்னதாக மொராக்கோ தனது நகரங்களை கவர்ச்சிகரமானதாக மாற்ற முயற்சிக்கிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக 30 லட்சம் தெரு நாய்களை கொல்ல மொராக்கோ திட்டமிட்டு , பணிகளை ஏற்கனவே தொடங்கியுள்ளது. மொராக்கோவின் இந்த மனிதாபிமானமற்ற முடிவிற்கு எதிராக, விலங்கு உரிமை ஆர்வலர்கள் தங்கள் கோவத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி மொராக்கோவில்  300,000 தெரு நாய்கள் கொல்லப்படுவதாகத் விலங்கு ஆர்வலர்கள் கவலை தெரிவித்து உள்ளனர். மொராக்கோ அரசின் நாய் கொலைகளின் ஒரு பகுதியாக, நாய்களுக்கு ஊசிகள் மூலம் விஷம் கொடுக்கப்படுகிறது. மேலும் உணவுகளில் விஷம் கலந்து கொடுக்கப்படுகிறது.

நாய்களை அந்த நாட்டு அரசாங்கம் தீவிரவாதிகளை போல சித்தரிக்கிறது. துப்பாக்கியுடன் உள்ளூர் போலீஸ்கள் நாய்களை தேடித்தேடி சுட்டு தள்ளுகிறார்கள். தினமும் டிரக்குகள் முழுக்க கொல்லப்பட்ட நாய்கள் கொத்து கொத்தாக கொண்டு செல்லப்படுகின்றன. கொல்லப்பட்ட  நாய்களின் இரத்தம் அங்கு ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. மொரோக்கோ முழுக்க அதன் வீச்சம் அடிக்கிறது.

இதையும் படியுங்கள்:
வாழ்வை வடிவமைத்து வெற்றி தரும் முடிவுகள்!
Dogs

இந்த கொலைகளை நேரில் பார்க்கும் மொராக்கோ நாட்டு சிறுவர்கள் மனநலம் பாதிக்கப்படுகின்றனர். ஒரு "பொழுது போக்கிற்காக நடத்தப்படும்  விளையாட்டுப் போட்டிகளுக்காக லட்சக்கணக்கில் விலங்குகளை கொல்லுவது ஏற்புடையது ஆகாது" என்று விலங்கு நல ஆர்வலர்கள், மொரோக்கோவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஃபிஃபா அமைப்பிற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும் நாய் கொலைகளைத் தடுக்கவும் மொராக்கோவின் தெருநாய்களைப் பாதுகாக்கவும் ஃபிஃபா வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்கு நல வழக்கறிஞர்கள் வலியுறுத்துகின்றனர்.இதுவரை, மொராக்கோ மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஃபிஃபா குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவில்லை. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com