குட் நியூஸ்.!! காவல் துறையில் 30,000+ காலிப் பணியிடங்கள்.! விரைவில் வரப்போகும் மெகா அறிவிப்பு.!

காவல் துறை
TN Police
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி இரவு லண்டன் சென்றடைந்தார். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் முதல்வரின் முதல் வெளிநாட்டுப் பயணமாக இது அமைந்துள்ளது. தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு, வருகின்ற செப்டம்பர் 16ஆம் தேதி துபாய் வழியாக முதல்வர் தமிழ்நாட்டுக்கு வர இருக்கிறார். இந்நிலையில் காவல் துறைக்கு மிக முக்கியமான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதன்படி வெகு விரைவில் காவல் துறையில் 29,108 பணியிடங்ளை நிரப்ப முதல்வர் விஜய் ஒப்பதல் அளித்துள்ளார். காவல் மற்றும் சட்டம் ஒழுங்கு துறையை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் விஜய், பட்ஜெட் கூட்டத் தொடரின் போது காவல் துறை மீதான மானியக் கோரிக்கைகளை தாக்கல் செய்தார்.

அப்போதே காவல் துறையை நவீனமயமாக்கவும், தொழில்நுட்பங்களை உட்புகுத்தி கவலர்களின் வேலைப் பளுவை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். அதோடு விரைவில் காவல் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான ஏற்பாடு செய்யப்படும் எனவும் முதல்வர் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்:
#JUST IN: விநாயகர் சிலைகளை கரைக்க தடை.!! பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி.!
காவல் துறை

தமிழக காவல் துறையில் நிலவுகின்ற ஆட்கள் பற்றாக்குறையை குறைக்கும் வகையில், வெகு விரைவில் 29,108 புதிய பணியிடங்களை உருவாக்க முதலமைச்சர் விஜய் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில் விரைவில் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு காவல் துறையில் அதிகளவில் நிரப்பப்படும் இத்தகைய காலிப் பணியிடங்களால், காவலர்களின் பணிச் சுமை கணிசமாகக் குறையும். அதோடு குற்றத் தடுப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு மேலும் வலுப்பெரும்.

குற்றம் நடந்த பிறகு தண்டனை வழங்குவதை விடவும், குற்றம் நடக்காமல் தடுப்பது தான் சிறந்தது என சட்டசபையில் முதல்வர் பேசினார். மேலும் குற்றம் நடப்பதற்கான சூழலைக் கண்டறிந்து அதனைத் தீர்க்க வேண்டும் எனவும் முதல்வர் காவல்துறை மானியக் கோரிக்கையின் போது தெரிவித்தார்.

இதனை செயல்படுத்தும் விதமாகவே தற்போது காவல் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.

காவல் துறை
Chennai Police
இதையும் படியுங்கள்:
"எங்களை விட AI ஆபத்தானது!" வீதியில் இறங்கி முழக்கமிட்ட ரோபோக்கள்.!
காவல் துறை

தமிழ்நாட்டில் ‘தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்’ மூலமாக அவ்வப்போது இரண்டாம் நிலைக் காவலர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் பணியிடங்கள் தேவைக்கேற்ப நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் காவல் துறையில் 29,108 காலிப் பணியிடங்களை தமிழக அரசு நிரப்பப் போகிறது என்பதால், காவல் துறை பணியில் சேர ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இது நற்செய்தியாக அமைந்துள்ளது.

தமிழ்நாட்டு தவெக அரசு பதவி ஏற்ற பிறகு சிங்கப்பென் சிறப்பு அதிரடி படைத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் 2,300-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உருவாக்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்தார்.

இதன் மூலம் வெகு விரைவில் தமிழ்நாட்டில் 30,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களைக் கொண்ட மிகப் பெரிய மெகா வேலைவாய்ப்பு வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com