விஜய் VS ஸ்டாலின்: பிரமாண பத்திரப் பதிவிறக்கத்தில் புதிய உச்சம் - சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்!

இந்திய தேர்தல் கமிஷன் வேட்பாளர்களின் பிரமாண பத்திரங்களை பொதுமக்கள் பார்க்கும் வகையில் புதிய வசதியை ஏற்படுத்தி உள்ளது.
விஜய்
விஜய்
Published on

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமான நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் இன்று (ஏப்ரல் 6) மாலை 3 மணியுடன் முடிவடைகிறது. வேட்புமனு பரிசீலனை நாளையும் (ஏப்ரல் 7-ம் தேதி), மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஏப்ரல் 9-ம் தேதியும் ஆகும். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. தேர்தல் முடிவுகளை மே 4-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி, அதிமுக-பாஜக கூட்டணி, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (TVK) மற்றும் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி என நான்கு கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

2-வது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்புடன் திமுகவுக்கும், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்துடன் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடிப்பாடி பழனிசாமிக்கும் இடையே நடக்கும் கடுமையான போட்டிக்கு நடுவில் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் (TVK) வருகை இரு கட்சிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதுடன் தமிழக அரசியலில் எந்த கட்சி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்லலாம்.

இதையும் படியுங்கள்:
#BREAKING : சென்னையில் நாளை நடைபெறவிருந்த விஜய் பிரச்சாரம் திடீர் ரத்து..!
விஜய்

அந்த வகையில் முதல்முறையாக தேர்தல் களத்தில் நுழைந்துள்ள விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் (TVK) வருகை மற்றும் திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு இடையிலான கடுமையான போட்டி, தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பிலும், தேர்தல் பிரசாரங்களிலும் முழுவீச்சில் இறங்கி உள்ளன.

தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள உறுதிமொழி பத்திரங்களில் உள்ள விவரங்களை அறிந்து கொள்வதில் பொதுமக்களிடையே அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் சொத்து மற்றும் பின்னணி விவரங்களை அறிந்துகொள்வதற்கு தான் அதிகளவிலான மக்கள் ஆர்வம் காட்டியது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் இந்திய தேர்தல் கமிஷன் வேட்பாளர்களின் பிரமாண பத்திரங்களை பொதுமக்கள் பார்க்கும் வகையில் புதிய வசதியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வகையில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் இந்திய தேர்தல் கமிஷனின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://affidavit.cci.gov.in/ பக்கத்தில் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் பிரமாண பத்திரங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

ஒரு வேட்பாளரின் சொத்துகள் விவரம், குற்ற வழக்குகள் நிலுவை குறித்த வெளிப்படையான தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு முக்கிய தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்த தேர்தலில் முதன் முறையாக களம் இறங்கும் தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவரது பிரமாண பத்திரத்தை மட்டும் இணையதளத்தில் இருந்து அதிகபட்சமாக சுமார் 3.20 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் சிறப்பு தொகுப்பு : மக்கள் மனதை வென்ற மகத்தான திட்டங்கள்..!
விஜய்

அவருக்கு அடுத்தப்படியாக மு.க.ஸ்டாலினின் பிரமாண பத்திரத்தை சுமார் 1.30 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com