நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), ஜூனியர் அசோசியேட் (கிளார்க்) பதவிக்கு 5,180 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது பட்டதாரிகளுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதும், அனுபவம் தேவையில்லை.
முக்கிய விவரங்கள்:
பணியிடங்களின் எண்ணிக்கை: மொத்தம் 5,180 (ரெகுலர்) மற்றும் 1,409 (பேக்லாக்) என மொத்தம் 6,589 காலியிடங்கள்.
பதவி: ஜூனியர் அசோசியேட் (வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை)
சம்பளம்: ஆரம்ப அடிப்படைச் சம்பளம் ரூ.26,730 முதல் ரூ.64,480 வரை நிர்ணயிக்கப்படும். தொடக்கமே அடிப்படை சம்பளம் ரூ.26,730 உடன் கொடுப்பனைகள் சேர்ந்து மாதம் ரூ.46,000 மெட்ரோ நகரங்களில் பணியமர்த்தப்படும் நபர்களுக்கு வழங்கப்படும்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு. இறுதி ஆண்டு மாணவர்கள் கூட விண்ணப்பிக்கலாம், ஆனால் அவர்கள் டிசம்பர் 31.12.2025க்குள் பட்டம் பெற வேண்டும்.
வயது வரம்பு: ஏப்ரல் 1, 2025 நிலவரப்படி 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது தளர்வு உண்டு.
தேர்வு முறை: முதற்கட்டத் தேர்வு (Preliminary) மற்றும் முதன்மைத் தேர்வு (Main) என இரண்டு நிலைகளைக் கொண்டது. முதன்மைத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே இறுதிக்கட்டத் தேர்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.750. SC/ST/PwBD பிரிவினருக்குக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிப்பதற்கான முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி: ஆகஸ்ட் 6, 2025
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஆகஸ்ட் 26, 2025
முதற்கட்டத் தேர்வு (Tentative): செப்டம்பர் 20, 21, 27 மற்றும் 28, 2025
முதன்மைத் தேர்வு (Tentative): நவம்பர் 15 மற்றும் 16, 2025
இந்த வேலைவாய்ப்பிற்கான முழுமையான விவரங்களுக்கு SBI-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.