#JUST IN : 72-வது தேசிய திரைப்பட விருதுகள் : முழு விபரம்!

2024-ம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிப்பு; சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதை வென்றார் தனுஷ்; மம்முட்டிக்கு சிறந்த நடிகர் விருது!
72வது தேசிய திரைப்பட விருதுகள்
72வது தேசிய திரைப்பட விருதுகள்SOURCE:TWITTER
Updated on

72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.இந்திய அளவில் சில முக்கிய ஆளுமைகள் ஜூரியாக செயல்பட்டு, தேசிய விருதுக்கான படைப்புகளை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அதில் தமிழகத்தில் இருந்து முழுநீள திரைப்படங்களுக்கான பிரிவில் (feature film) கலா மாஸ்டர் பங்கேற்றார். Non feature film - குறும்படங்கள் மற்றும் ஆவணப் படங்கள், அனிமேஷன் ஆகிய பிரிவுக்கு இயக்குனர் இ.வி.கணேஷ் பாபு, தமிழ்நாட்டில் இருந்து சென்று ஜூரியாக செயல்பட்டு இருக்கிறார். 2024ம் ஆண்டு தணிக்கை சான்றிதழ் பெற்ற படைப்புகளுக்கான விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.

  • கேப்டன் மில்லர் படத்தில் நடித்த நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது அறிவிப்பு..கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு மற்றொரு விருது அறிவிக்கப்பட்டுள்ளது சமூக மற்றும் தேசிய நலனுக்காக எடுக்கப்படும் திரைப்படம் பிரிவில் அறிவிப்பு

  • சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது தனுஷ் இயக்கிய ராயன் படத்திற்கு அறிவிப்பு

  • ‘மெய்யழகன்’ படத்திற்கு சிறந்த ஒலிக்கலவைக்கான (சிறப்பு விருது) தேசிய விருது அறிவிப்பு

  • அமரன் திரைப்படத்திற்கு சிறந்த பிண்ணனி இசைக்கான தேசிய விருது. ‘அமரன்’ படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

  • மகாராஜா படத்திற்காக அனல் அரசுக்கு சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான தேசிய விருது அறிவிப்பு

  • இயக்குநர் துஷார் ஹிராந்தானியின் ஸ்ரீகாந்த் படத்துக்கு சிறந்த இந்தி படத்துக்கான தேசிய விருது அறிவிப்பு

  • புஷ்பா 2 படத்திற்காக ஷீத்தலுக்கு சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிப்பு

  • சிறந்த திரைக்கதை வசனத்திற்கான தேசிய விருது பெற்றார் லக்கி பாஸ்கர் இயக்குநர் வெங்கீ அட்லூரி

  • மம்முட்டிக்கு சிறந்த நடிகருக்கான விருது தேசிய விருது பிரம்மயுகம் திரைப்படத்திற்காக

  • சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருது பிரம்மயுகம் படத்துக்கு அறிவிப்பு

  • வீர சாவர்க்கர் படமான சுதந்திர வீரசாவர்க்கர் திரைப்படத்தின் இயக்குனர் ரந்தீப் ஹூடா விற்கு சிறந்த அறிமுக இயக்குனருக்கான தேசிய விருது

  • அமரன் படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெறுகிறார் ராஜ்குமார் பெரியசாமி

  • அமரன் படத்திற்காக ஜி.வி.பிரகாஷுக்கு சிறந்த பின்னணி இசை, கலைவாணனுக்கு சிறந்த படத்தொகுப்பு, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது அறிவிப்பு

  • சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது புஷ்பா 2 படத்துக்கு அறிவிப்பு

  • ‘மெய்யழகன்' படத்திற்கு சிறந்த Sound Mix (சிறப்பு விருது) தேசிய விருது அறிவிப்பு!

  • சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - கல்கி 2898 ஏ.டி

  • மகாராஜா படத்திற்காக சாச்சனா நமிதாஸுக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது அறிவிப்பு

  • நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்துக்கு 3 தேசிய விருது.அமரன் படத்திற்கான சிறந்த பின்னணி இசைக்காக ஜி.வி.பிரகாஷ்-க்கு விருது
    அதேபோல், அமரன் படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது ராஜ்குமார் பெரியசாமிக்கும்,
    எடிட்டர் கலைவண்ணனுக்கு சிறந்த படத்தொகுப்புக்கான தேசிய விருதும் அறிவிப்பு

  • Non-Feature படங்கள் பிரிவில் ‘BLUE’ என்ற தமிழ் படத்திற்காக சிறந்த ஒலி வடிவமைப்புக்கான தேசிய விருது

  • ஏ.ஆர்.எம் திரைப்படத்தில் வரும் அங்கு வான கோனிலு என்ற பாடலுக்காக வைக்கம் விஜயலஷ்மிக்கு தேசிய விருது அறிவிப்பு

  • சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருது பிரம்மயுகம் படத்துக்கு அறிவிப்பு

  • அறிமுக இயக்குநர் சுமந்த் பட் இயக்கத்தில், வெளியான ”மித்யா” படத்திற்கு சிறந்த கன்னட படத்திற்கான தேசிய விருது அறிவிப்பு

  • சிறந்த நடிகைக்கான தேசிய விருது ஆர்ட்டிகல் 370 படத்திற்காக யாமி கௌதம்-க்கு அறிவிப்பு

  • சுரேனுக்கு சிறப்பு விருது (ஒலிக்கலவை - மெய்யழகன்)

  • இயக்குநர் ஃபாசில் முகமதுவின் 'பெமினிச்சி பாத்திமா என்ற படத்துக்கு சிறந்த மலையாளப் படத்துக்கான தேசிய விருது
     

இதையும் படியுங்கள்:
"இது எனக்கு இரண்டாவது துரதிர்ஷ்டம்!" - சிம்பு படம் குறித்து நடிகை கயாடு லோஹரின் ஆதங்கம்!
72வது தேசிய திரைப்பட விருதுகள்
logo
Kalki Online
kalkionline.com