சிரியாவிலிருந்த 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு!

Syria
Syria
Published on

சிரியாவில் உள்நாட்டுப் போர் வெடித்துள்ள நிலையில், அங்குள்ள 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சிரியாவில் 2011ம் ஆண்டிலிருந்து உள்நாட்டுப் போர் வெடித்துள்ளது. அங்குள்ள அதிபர் பஷார் அல்-ஆசாத் தலைமையிலான அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான சண்டை நீடித்து வருகிறது. இந்த சண்டையில் பல வருடங்களாக அவ்வளவு முன்னேற்றம் தெரியவில்லை என்றாலும், கடந்த வாரம் மீண்டும் மிகப்பெரிய கிளர்ச்சி வெடித்துள்ளது. அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து முன்னேறி தலைநகர் டமாஸ்கசையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து 50 ஆண்டு கால ஆசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதிபர் ஆசாத் பாதுகாப்பு கருதி நாட்டைவிட்டு வெளியேறி ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.

ஏனெனில், ஈரானுக்கு சிரியா மிகவும் அவசியமான ஒரு நாடாகும். லெபனானில் ஈரான் உருவாக்கிய ஹிஸ்புல்லா படையினருக்காக இந்த உறவு அவசியமானதாக இருந்தது. சிரியாவும் ஈரான் மற்றும் ரஷ்யா நாடுகளை நம்பிய ஒரு தேசமாகவே இருந்தது.

இதையும் படியுங்கள்:
மலைவாழ் மக்களில் 80% பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர்!
Syria

இப்படியான சூழ்நிலையில் தற்போது 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு லெபனான் சென்றுள்ளதாகவும், அங்கிருந்து வணிக விமானங்கள் மூலம் நாடு திரும்பவுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

சிரியாவிலிருந்து மீட்கப்பட்டவர்களில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 44 ஜைரீன்கள் அடங்குவர். இவர்கள் சைதா ஜைனாபில் சிக்கியிருந்தனர். சிரியாவில் சிக்கித் தவித்த இந்தியர்களின் கோரிக்கைகள் மற்றும் அங்குள்ள பாதுகாப்பு நிலைமை குறித்த மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்திய தூதரகங்கள் இணைந்து இந்த மீட்பு பணிகளை மேற்கொண்டதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
பாப விமோசனம் அளிக்கும் கைசிக ஏகாதசி விரத வழிபாடு!
Syria

சிரியாவை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அங்குள்ள இந்தியர்களை முதற்கட்டமாக மீட்கும் முயற்சியில் இறங்கி 75 பேரை மீட்டுள்ளனர். ஆனால், இன்னும் சில இந்தியர்கள் அங்கு உள்ளதால், அவர்கள் டமாஸ்கசில் உள்ள தூதரகத்துடன் +963 993385973 என்ற உதவி எண்ணிலும், வாட்ஸ்அப்பிலும், மற்றும் hoc.damascus@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் தொடர்பில் இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

சிரியாவில் உள்ள வெளிநாட்டவர்களையும் மீட்கும் முயற்சியில் அந்தந்த நாடுகள் இறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com