குட் நியூஸ்..! ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் அறிவிப்பு..!

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் போனஸாக வழங்க ஒப்புதல்
Ralway bonus
Ralway bonus source:twitter
Updated on: 

தீபாவளி பண்டிகையையொட்டி ரயில்வே பணியாளர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் சுமார் 11.40 லட்சம் non-gazetted ரயில்வே ஊழியர்கள் பயன்பெறும் வகையில், மொத்தம் ரூ.2,009.61 கோடி செலவில் இந்த போனஸ் தொகை வழங்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு நிருபர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:இன்றைய கூட்டத்தில் மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. முதலாவதாக ரயில்வேயில் பணியாற்றும் 11,40,770 ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் போனசாக வழங்கப்படும். இந்த போனஸ், இரவும், பகலும் அயராது உழைக்கும் ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக அமையும். நாம் குடும்பங்களுடன் பண்டிகையை கொண்டாடும்போது, இந்த ஊழியர்கள் ரயில்வே தண்டவாளங்கள், ரயில்கள், தொழிற்சாலைகளில் 24 மணி நேரமும் கடினமாக உழைக்கின்றனர். இதனால், அரசுக்கு 2,009 கோடி ரூபாய் செலவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Railway bonus
Railway bonus

ரயில்வே ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் துர்கா பூஜை / தசரா விடுமுறைக்கு முன்னதாகவே இந்த போனஸ் தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டும்,11,40,770 ஊழியர்களுக்கு ரூ 2,009.61 கோடி மதிப்பிலான 78 நாட்களுக்கான உற்பத்தித் திறன் சார்ந்த கூடிய போனஸ் வழங்கப்படுகிறது. ரயில்வே துறையின் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில் பணியாற்ற ஊழியர்களை ஊக்குவிப்பதற்கான உந்துசக்தியாக இந்தப் போனஸ் வழங்கப்படுகிறது.

தகுதியுள்ள ஒரு ரயில்வே ஊழியருக்கு, 78 நாட்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச போனஸ் தொகை ரூ.17,951 ஆகும். இத்தொகை, ரயில்வேயின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்களான இருப்புப்பாதை பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்டுகள், ரயில் மேலாளர்கள் (கார்டுகள்), நிலைய மேலாளர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், பாயிண்ட்ஸ்மேன்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் இதர குரூப் சி ஊழியர்களுக்கு வழங்கப்படும்.

2025-26-ம் ஆண்டில், ரயில்வேயின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்தது. ரயில்வே நிர்வாகம் சாதனை அளவாக, 1670 மில்லியன் டன் சரக்குகள் மற்றும் 7.41 பில்லியன் பயணிகளை கையாண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்.!! இனி எந்த ரயிலும் லேட்டா வராது.!! ரயில்வேயின் செம திட்டம்.!
Ralway bonus
logo
Kalki Online
kalkionline.com