குட் நியூஸ்.!! இனி எந்த ரயிலும் லேட்டா வராது.!! ரயில்வேயின் செம திட்டம்.!

என்ஜின் பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி வைக்க புதிய தீர்வு.
ரயில் கால தாமதம்
Train Late
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

இந்தியாவில் பொதுமக்கள் அதிகளவில் ரயில் போக்குவரத்தையே பயன்படுத்தி வருகின்றனர். சௌகரியமான பயணம், அடிப்படை வசதிகள் மற்றும் குறைந்த கட்டணம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ரயில் பயணத்தில் நிறைந்துள்ளன. மேலும் ரயில் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்த இந்திய ரயில்வே துறையும் அவ்வப்போது பல புதிய திட்டங்களை கொண்டு வருகிறது.

இருப்பினும் எக்ஸ்பிரஸ் ரயில்களைக் காட்டிலும் நகர்ப்புறங்களில் இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் அடிக்கடி கால தாமதமாக வருகின்றன. இதனால் வேலைக்கு செல்வோர் நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

இந்நிலையில் பயணிகள் ரயில்களின் கால தாமதத்திற்கு என்ன காரணம் என்ற தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இதனை சரிசெய்ய ரயில்வே நிர்வாகம் என்ன செய்யப் போகிறது என்ற அறிவிப்பும் வெளிவந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
தமிழ்ப் பெண்ணுக்கு அமைதிக்கான நோபல் பரிசு.! யார் இந்த நவநீதம் பிள்ளை.!
ரயில் கால தாமதம்

சரக்கு ரயில் இன்ஜின்கள் 100 கி.மீ. வேக்திலும், பயணிகள் ரயில் இன்ஜின்கள் 130 கி.மீ. வேகத்திலும் இயங்கக் கூடியவை. ஆனால் பயணிகள் ரயில் இன்ஜினுக்கு பற்றாக்குறை ஏற்பட்ட காரணத்தால், சரக்கு ரயில் இன்ஜினைப் பொருத்தி பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதனால் ரயில்கள் இயக்கப்படும் வேகம் குறைகிறது. இதனால் ரயில்களின் பயண நேரம், திட்டமிடப்பட்ட நேரத்தை விட அதிகமாகிறது. இதன் காரணமாக மாதந்தோறும் சுமார் 80 முதல் 100 ரயில்கள் வரை கால தாமதத்தைச் சந்திக்கின்றன என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

இதுஒருபுறம் இருக்க சிக்னல் கோளாறு காரணமாக அவ்வப்போது ரயில்கள் நிறுத்தப்படுவதால், கால தாமதம் ஏற்படுகிறது. சென்னையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, பரங்கிமலை, அரக்கோணம், கும்முடிபூண்டி, சூலூர்பேட்டை மற்றும் நெல்லூர் வரை பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது.

இதில் தாம்பரம் மற்றும் அரக்கோணம் வழித் தடங்களில் 4 வழிப் பாதை இருப்பதால் எக்ஸ்பிரஸ் ரயில்களும் பயணிகள் ரயிலும் கால தாமதமின்றி பயணிக்கின்றன.

ஆனால் கும்முடிபூண்டி மற்றும் சூலூர்பேட்டை வழித்தடத்தில் பயணிகள் ரயிலுக்கு தனிப்பாதை இல்லாததால், எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் வரை பயணிகள் ரயில் லூப் டிராக்கில் காத்திருக்க வேண்டும். இதனால் இந்த வழித்தடத்தில் நாள்தோறும் பெரும்பாலான ரயில்கள் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேல் கால தாமதமாக செல்கின்றன.

Train Travel
Train Travel
இதையும் படியுங்கள்:
ஷாக்.!! மீண்டும் எகிறியது தங்கம் விலை.! 2 நாட்களில் ரூ.1,360 உயர்வு.!
ரயில் கால தாமதம்

இந்நிலையில் ரயில் இன்ஜினால் ஏற்படும் கால தாமதத்தைக் குறைக்க பயணிகள் ரயில் இன்ஜின்களை தயாரிக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இதன்படி அடுத்த 2 ஆண்டுகளில் 679 புதிய பயணிகள் ரயில் இன்ஜின்கள் தயாரிக்கப்பட உள்ளன. பயணிகள் ரயில் இன்ஜின்கள் தயாரிக்கப்பட்டால், ரயில்களின் கால தாமதம் குறைக்கப்படும் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் 2 வழிப் பாதையில் பயணிகள் ரயில் இயக்கப்படும் பகுதிகளில் 4 வழிப் பாதையை அமைக்கவும் ரயில்வே துறை நடவடிக்கை எடுத்தால், எண்ணற்ற பயணிகள் பயன் அடைவார்கள்.

பயண நேரத்தைக் குறைக்க நகரங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் விம்கோ நகர் முதல் கோயம்பேடு வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் போரூர் முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது.

அடுத்ததாக பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைக்க இருக்கிறார். மெட்ரோவை விட பயணிகள் மின்சார ரயிலையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். ஆகையால் மின்சார ரயில் சேவையை மேம்படுத்த அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்

logo
Kalki Online
kalkionline.com