வரப்போகுது, வரப்போகுது! நல்ல காலம் பிறக்கப் போகுது! எங்க தெரியுமா?

Coming soon
Coming soon
Published on

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 20,000 கோடி ரூபாய் முதலீட்டில், தமிழ்நாட்டில் 963 கிமீ நீளம் கொண்ட நான்கு வழி சாலைகளை விரிவாக்கம் செய்து வருகிறது.

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் கூடுதலாக 963 கிலோ மீட்டர் நீளம் கொண்ட 4 வழி சாலைகள் பயன்பாட்டுக்கு வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நான்கு வழிச்சாலை திட்ட பணிகள் குறித்த விவரங்களை அரசு, நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளது.

இதன்படி, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் கூடுதலாக 963 கிலோ மீட்டர் நீளம் கொண்ட நான்கு வழி சாலைகள் பயன்பாட்டுக்கு வர இருக்கின்றன. இதனை அடுத்து தமிழ்நாட்டில் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 2735 கிலோமீட்டர் இருந்து 3698 கிலோ மீட்டராக உயரும்.

தமிழ்நாட்டில் மொத்தமாக தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 6805 கிலோ மீட்டராக உள்ளது. இதில் இரண்டு வழி சாலைகள் 1882 கிலோமீட்டர், நடைபாதை மற்றும் மிதிவண்டிகளுக்கான பாதை கொண்ட இரண்டு வழிச்சாலைகளின் நீளம் 2383 கிலோ மீட்டர் ஆகும். ஆறு வழிச்சாலைகளின் நீளம் 384 கிலோ மீட்டராகவும் எட்டு வழி சாலை நீளம் 21 கிலோமீட்டராகவும் உள்ளது.

இதையும் படியுங்கள்:
நாகமணியைக் கண்டீரோ?
Coming soon

குறிப்பாக தமிழ்நாட்டில் தற்போது 8 சாலை திட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் , அதில் நான்கு வழி சாலை பணிகள் ஆறு இடங்களில் 767 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டு வருவதாகவும், இந்த பணிகள் 70% முடிந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டு காலத்திற்குள் இந்த பணிகள் முழுமை பெற்று இந்த நான்கு வழிச்சாலைகள் அனைத்தும் பயன்பாட்டிற்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மாமல்லபுரம்-புதுச்சேரி இசிஆர் சாலை, திண்டுக்கல் மற்றும் பொள்ளாச்சி இடையிலான நான்கு வழிச் சாலை, நாகை தஞ்சாவூர் இடையிலான சாலை இதில் அடங்கும்.

767 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சாலை பணிகள் அடுத்த 12 முதல் 15 மாதங்களுக்குள் முழுமையாக நிறைவு பெற்று பயன்பாட்டுக்கு வரும் என்றும் அரசு தெரிவிக்கிறது. குறிப்பாக திண்டுக்கல் மற்றும் பொள்ளாச்சி இடையிலான 131.9 கிலோமீட்டர் நீளம் கொண்ட நான்கு வழி சாலை பணிகள் பெருமளவில் முடிவடைந்து விட்டன.

2014 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு வரையிலான பத்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் மூலம் 26,000 கோடி ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
வந்துவிட்டது காதலர் தின (பிப்-14) வாரம் - எந்த நாள் என்ன நாள்?
Coming soon

இவ்வாறு மாநிலத்தில் நான்கு வழி சாலைகளை விரிவாக்கம் செய்வதன் மூலம் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 72 இலிருந்து 90 ஆக அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 20,000 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் நான்கு வழி சாலைகளை விரிவாக்கம் செய்து வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com