சமூகத்தின் முக்கிய அங்கமாக பெண்கள் உள்ளனர். அவர்கள் சவால்களை மீறி வாழ்க்கையில் முன்னேற முயற்சி செய்கின்றனர். ஆனால் அவர்களுக்கு நிதி சிக்கல்கள் ஒரு பெரிய தடையாக இருக்கின்றன.
குறிப்பாக, கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் போன்றோருக்கு நிதிசார்ந்த சவால்கள் ஏராளம். இந்தப் பிரச்சினையைப் புரிந்துகொண்டு, கைம்பெண் ஓய்வூதியத் திட்டத்தை இந்திய அரசு தொடங்கியுள்ளது. அரசு தரப்பிலிருந்து கைம்பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியத் தொகை வழங்கப்படுகிறது.
கைம்பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம் கைம்பெண் பெண்களின் வாழ்க்கையை எளிமையாகவும் மரியாதையாகவும் மாற்றுவதற்கு அவர்களுக்கு நிதியுதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கைம்பெண் ஓய்வூதியத் திட்டத்தின் நோக்கம் நிதியுதவி வழங்குவது மட்டுமின்றி பெண்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும், அதிகாரம் பெற்றவர்களாகவும் மாற்றுகிறது.
கைம்பெண் ஓய்வூதிய திட்டத்தின் மூலம் பெறப்படும் ஓய்வூதியத் தொகை, பெண்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது. ஓய்வூதியம் மூலம் பெண்கள் சுயமரியாதை பெறுவதோடு அவர்கள் பாதுகாப்பாக உணர்வார்கள். ஒரு நிலையான ஓய்வூதியம் கிடைத்தால், பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் சிறந்த வாழ்க்கையை வாழ முடியும்.
கைம்பெண் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பெறப்படும் ஓய்வூதியத் தொகை மாநில அரசுகளின் கொள்கைகள் மற்றும் பட்ஜெட்டைப் பொறுத்தது. வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறாக ஓய்வூதியத்தொகை இருக்கிறது. இவ்வோய்வூதியத் தொகை சமீபத்தில் ஆந்திராவில் ரூ. 3000மாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ரூ. 1200ம், உத்தரப் பிரதேசத்தில் மாதம் ரூ. 500 முதல் ரூ. 1000ம், மத்தியப் பிரதேசத்தில் மாதம் ரூ. 600 முதல் ரூ. 1200ம், ராஜஸ்தானில் மாதம் ரூ. 750 முதல் ரூ. 1500ம், பீகாரில் மாதம் ரூ. 400 முதல் ரூ. 800ம் வழங்கப்படுகின்றது.
பெண்களின் பொருளாதாரம் மற்றும் குடும்ப சூழ்நிலையின் அடிப்படையில், அவர்களின் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்ய மாநில அரசுகள் இந்த தொகையை முடிவு செய்கின்றன.
கைம்பெண் ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களைப் பெற கைம்பெண்கள் அருகிலுள்ள அரசு அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகம் அல்லது ஆன்லைன் போர்ட்டலில் விண்ணப்பப் படிவத்தைப் பெற வேண்டும். ஆதார் அட்டை, கைம்பெண் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் போன்ற ஆவணங்கள் தேவைப்படும். தேவையான அனைத்து தகவல் மற்றும் ஆவணங்களுடன் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரருக்கு நிரந்தர வருமான ஆதாரம் எதுவும் இருக்கக்கூடாது. அவர்களின் மாத வருமானம், மாநில அரசு நிர்ணயித்த வருமான வரம்புக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பத்தின் போது அனைத்து ஆவணங்களும் சரியாகவும் செல்லுபடியாகவும் இருக்க வேண்டும்.
கைம்பெண் ஓய்வூதியத் திட்டம் கோடிக்கணக்கான பெண்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. ஓய்வூதியத் தொகையைக் கொண்டு பெண்கள் தங்கள் உடல்நலம் மற்றும் வாழ்க்கை முறையை மேம்படுத்திக் கொள்ளலாம். தன்னிறைவு பெற்ற பெண்கள் சமூகத்திற்கு மரியாதை மற்றும் பங்களிப்பு இரண்டையும் பெறுகிறார்கள்.
மத்திய அரசும், மாநில அரசுகளும் கைம்பெண் ஓய்வூதியத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்த தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தி விண்ணப்ப செயல்முறை எளிமையாகவும் வெளிப்படையாகவும் செய்யப்படுகிறது. இது தவிர, மாநிலங்களில் விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்தி இத்திட்டத்தின் பலன்களை அதிக பெண்களிடம் விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.