புதிதாக திருமணம் ஆனவர்கள் தங்கள் திருமண பதிவை ஆன்லைனிலேயே செய்துக்கொள்ளலாம் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது.
முன்பெல்லாம் திருமணம் செய்துக்கொண்டவர்கள் திருமணத்தை பதிவு செய்வது அவசியம். இதனை பத்திர பதிவு அலுவலங்களில் பதிவு செய்வார்கள். பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே திருமணத்தை பதிவு செய்ய முடியும் என்ற நிலையில், பாஸ்போர்ட் பெறும் தம்பதிகள் மட்டுமே பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து வருகிறார்கள் என்றும் மற்றவர்கள் பதிவு செய்வதில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும் பலர் பதிவு செய்யாமலேயே இழுத்து அடித்து வருகிறார்கள். பத்திரம் தேவைப்படும்போது மட்டும் பதிவு செய்கிறார்கள். இதனால் அபராதங்களும் விதிக்கப்படுகின்றன.
ஆகையால், இந்த திருமண பதிவு செய்வதை எளிதாக்க தமிழக அரசு ஒரு புதிய திட்டத்தை அமல்படுத்தவுள்ளது. அதாவது ஆன்லைன் மூலமே இனி திருமண பத்திரத்தை பதிவு செய்துக்கொள்ளலாம்.
திருமண பதிவிற்கு 100 ரூபாய் மற்றும் கம்ப்யூட்டர் கட்டணம் 100 ரூபாய் என 200 ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும் என்ற நிலையில், அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்கள் என்பதால் கூடுதல் பணம் செலவிடப்படுகிறது. இது அத்தியாவசிய ஒன்று என்பதால், இதில் லஞ்சம் கொடுப்பது சாதாரண மக்களுக்கு முடியாத காரியமாகிவிடுகிறது.
இதனால் பல இடங்களில் புகார்கள் எழுந்தன. இதற்கு தீர்வு காணும் வகையில், தமிழக அரசு தற்போது ஆன்லைன் திருமணத்தை பதிவு செய்யும் நடைமுறையை கொண்டு வர உள்ளது.
இனி வீட்டில் இருந்தப்படியே ஆன்லைனில் பதிவு செய்து கட்டணம் செலுத்திக்கொள்ளலாம். ஆன்லைன் மூலமாக, அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் திருமணங்களை பதிவு செய்வதால், லஞ்சம் உள்ளிட்ட மோசடி தடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் அலையாமல் எளிதாக பதிவு செய்துக்கொள்ளலாம். இதுபோன்ற பல நன்மைகள் இதில் அடங்கியுள்ளன.
ஆன்லைனில் அப்ளே செய்யும் வசதி போல அனைத்து பத்திரப் பதிவுக்கு வந்தாலும், வரவேற்க கூடியதுதான். ஏனெனில், அலுவலகத்திற்கு சென்று வாங்கும்போது மக்களை வேண்டுமென்றே இழுத்தடிப்பது, லஞ்சம் வாங்குவது போன்றவை குறையும்.