செல்லுக்குள்ள ஒரு செக்யூரிட்டி ஆபீஸர்!உங்க உடம்புக்குள்ள நடக்கும் மேஜிக் - இனி பெரிய நோய்களைக் குணப்படுத்தலாம்..!!

Molecular 'passport' checked at cell nucleus gate.
Cell's "passport" enters nucleus gateway for check.
Published on

அறிவியல் உலகத்துல இப்பதான் ஒரு செம அதிரடி ட்விஸ்ட் வெளியாகி இருக்கு! நம்ம உடம்போட 'ரகசியக் கோட்டை'க்குள்ள (செல்லுக்குள்ள) என்ன நடக்குதுன்னு தெரிஞ்சா நீங்க மிரண்டு போவீங்க!

உலகப் புகழ்பெற்ற 'Proceedings of the National Academy of Sciences (PNAS)' சஞ்சிகையில வந்த இந்த அதிரடி ரிப்போர்ட், புற்றுநோய் உட்பட பல நோய்களை விரட்டப் போகுதுன்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க.

நாம எல்லாரும் அடுத்த நாட்டுக்குப் போகணும்னா, அங்க செக்-போஸ்ட் (Security Checkpoint) இருக்கும்.

அதுல சரியான பாஸ்போர்ட் (Passport) காட்டுனா மட்டும்தான் உள்ளே அனுமதிப்பாங்க, இல்லன்னா திருப்பி அனுப்பிடுவாங்க இல்லையா?

அதே மாதிரி நம்ம உடம்புக்குள்ள இருக்குற ஒவ்வொரு செல்லுக்கும் ஒரு மையப்பகுதி இருக்கு.

அதுதான் நியூக்ளியஸ் (Nucleus), அதாவது செல்லோட மூளைன்னு வெச்சுக்கோங்க.

இந்த மூளைக்குள்ள முக்கியமான தகவல்களும், புரோட்டீன்களும் போகணும். ஆனா, தேவையில்லாத கெட்ட விஷயங்கள் உள்ளே போயிடக் கூடாது.

அப்படியான ஒரு முக்கியமான வேலையைச் செய்யுற ஒரு நுண்ணிய வாசல் (Tiny Gate) நம்ம செல்லுக்குள்ள இருக்கு.

இந்த வாசலுக்கு, Nuclear Pore Complexes (NPCs) அப்படின்னு பேரு. ஒரு மனுஷ முடியோட அகலத்துல 500-ல் ஒரு பங்குதான் இதோட சைஸ்!

இது எவ்வளவு சின்னதுன்னு கற்பனை பண்ணிப் பாருங்க!

இதுல என்ன பெரிய மர்மம்?

பல வருஷமா விஞ்ஞானிகளுக்கு ஒரு பெரிய குழப்பம் இருந்துச்சு.

இந்த வாசல் ரொம்பச் சின்னதா இருந்தும், இது எப்பவும் திறந்து தான் இருக்கும். ஆனா, இது ஒரே நேரத்துல ரெண்டு விசித்திரமான வேலைகளைச் செய்யுது:

  1. செலக்டிவ்: ரொம்பத் தேவையான, சரியான மாலிக்யூல்களை (Molecules) மட்டும் டக்குனு உள்ளே அனுப்புது.

  2. வேகம்: அதே சமயம், ஒரு நிமிஷத்துக்குக் கோடிக்கணக்கான மாலிக்யூல்களை இது கடத்திட்டு இருக்கு.

எப்படி ஒரே வாசல், திறந்து வெச்சுட்டே, இவ்வளவு வேகமாகவும், இவ்வளவு சரியாகவும், யாரு உள்ளே வரணும், யாரு வரக் கூடாதுன்னு முடிவெடுக்குது?

ஒருவேளை இது ரொம்ப இறுக்கமான கதவோ, இல்லைனா ஒரு மெல்லிய சல்லடையோ (Sieve) இருக்கலாமோன்னு நினைச்சாங்க.

ஆனா, அந்த மாடல் எதுவுமே சரியாக வேலை செய்யல.

இப்பதான் ரகசியம் உடைந்தது!

இஸ்ரேல் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் சேர்ந்துதான் இந்த ரகசியத்தை உடைச்சிருக்காங்க. அவங்க சொன்ன விஷயம் ரொம்பவே சுவாரஸ்யம்:

அந்தச் சின்ன வாசலுக்குள்ள, புரோட்டீன் கயிறுகள் அடர்ந்து வளர்ந்த ஒரு காடு மாதிரி இருக்குதாம். அந்தக் காடு எப்பவும் அசைஞ்சுகிட்டே இருக்குமாம்.

  • சும்மா தனியா உள்ள வர முயற்சி செய்யுற மாலிக்யூலை இந்த அசைவு, கயிறு தடுப்புப் போட்டு வெளியிலேயே இருன்னு சொல்லித் தடுத்துடுமாம்.

  • ஆனா, உள்ளே போக வேண்டிய பெரிய மாலிக்யூல்கள் ஒரு மாலிகுலார் பாஸ்போர்ட்-ஐ (Molecular Passport) வெச்சிருக்கும். இந்தக் கண்டுபிடிப்புல, இந்த பாஸ்போர்ட்டைத்தான் Nuclear Transport Receptors அப்படின்னு சொல்றாங்க.

  • இந்த பாஸ்போர்ட் உள்ளே வந்ததும், அசைஞ்சுகிட்டு இருக்குற புரோட்டீன் கயிறுகள் கூட சட்டுன்னு ஒரு டான்ஸ் ஆடுமாம்.

  • அந்த ஒரு சில மில்லி செகண்ட் நேரத்துக்குள்ள, கயிறு விலகி, பாஸ்போர்ட்டை வெச்சிருக்கிற முக்கியமான மாலிக்யூலை உள்ளே அனுமதிச்சுட்டு, மறுபடியும் மூடிடுமாம்.

இதுக்குப் பேருதான் "ஷிஃப்டிங் டான்ஸ் (Shifting Dance)" மாடல். இந்த டான்ஸ் காரணமாத்தான் செல்லோட வாசல் ரொம்ப வேகமாகவும், ரொம்ப சரியாகவும் பாதுகாப்புப் பணியை செய்யுதுன்னு விஞ்ஞானிகள் நிரூபிச்சிருக்காங்க.

இந்தக் கண்டுபிடிப்பால் நமக்கு என்ன நன்மை?

இந்தக் கண்டுபிடிப்பு சும்மா அறிவியல் புத்தகத்துக்காக மட்டும் இல்லை. இது பல பயங்கரமான நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்க ஒரு பெரிய வழியைத் திறந்து வெச்சிருக்கு.

  1. நோய்களுக்குத் தீர்வு: புற்றுநோய் (Cancers), அல்சைமர்ஸ் (Alzheimer's) மற்றும் ஏ.எல்.எஸ் (ALS) போன்ற பல நோய்கள், இந்த செல்லின் வாசல் (NPC) சரியாக வேலை செய்யாததால்தான் வருது.

  2. இந்த 'பாஸ்போர்ட்' எப்படி வேலை செய்யுதுன்னு தெரிஞ்சா, அந்த நோய் ஏன் வருதுன்னு புரிஞ்சுக்கலாம்.

  3. புதிய மருந்துகள்: எதிர்காலத்துல, விஞ்ஞானிகள் இந்த அறிவைப் பயன்படுத்தி, செயற்கைப் பாஸ்போர்ட்டுகளை (Engineered Passports) உருவாக்கலாம்.

  4. அதாவது, நாம் கொடுக்கிற மருந்துகள் நேரா செல்லோட மூளைக்குள்ள (Nucleus) போகணும்னா, இந்த செயற்கைப் பாஸ்போர்ட்டை அதுக்குக் கொடுத்து அனுப்பி, சரியான இடத்துல மருந்தைச் சேர்க்கலாம்.

  5. அட்வான்ஸ் டெக்னாலஜி: ஆய்வகங்கள்ல மாலிக்யூல்களை ரொம்பத் துல்லியமா ஆராய, செல்லோட வாசலைப் போலவே வேலை செய்யுற செயற்கை நானோ-துளைகளை (Synthetic Nanopores) உருவாக்கவும் இது உதவும்.

இதையும் படியுங்கள்:
நாம் கருவில் இருக்கும்போதே, நம் விரல்கள் ஏன் ஒட்டாமல் பிரிகின்றன?
Molecular 'passport' checked at cell nucleus gate.

சுருக்கமா சொல்லணும்னா, நம்ம உடம்புக்குள்ள இருக்குற ரொம்பவே சின்ன ஒரு கதவு எப்படி இயங்குதுன்னு கண்டுபிடிச்சிருக்கோம்.

இது மூலமா, பல பெரிய நோய்களைக் குணப்படுத்த ஒரு பெரிய அஸ்திவாரத்தை நம்ம அமைச்சுட்டோம்னு சொல்லலாம்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com