மும்பையை சேர்ந்த ஒரு பெண் சுமார் 27 லட்சத்திற்கு லிப்ஸ்டிக் கைப்பையை வாங்கி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார்.
பொதுவாக பெண்கள் அழகு சாதன பொருட்கள் வாங்க மிகவும் ஆசைக்கொள்வார்கள். அதேபோல், அந்த பொருட்களை பாதுகாத்து வைப்பதிலும் அதிக கவனம் செலுத்துவார்கள். ஆனால், அதற்காக இப்படியா?!! என்று ஆச்சர்யப்படும் விதமாக ஒரு பெண் செய்த காரியம்தான் பேசுபொருளாக மாறியுள்ளது.
அந்த பெண் மற்றும் அவரது தாய் இருவரும் ஒரு கடைக்குச் சென்று கைப்பை வாங்குகிறார்கள். அதில் அந்த கடைக்கார பெண் ஒவ்வொரு மாடலாக காட்டுகிறார். அப்போது கடையில் உள்ள அந்த பெண் அவர்களிடம் புகழ்பெற்ற ஹெர்மிஸ் கெல்லி (Hermes Kelly) நிறுவனத்தின் ஆடம்பரக் கைப்பைகளைக் காட்டுகிறார்.
வெள்ளைக் கைப்பை, கறுப்புக் கைப்பையுடன் பழுப்பு மற்றும் நீல நிறங்களிலும் கைப்பைகளை ஒவ்வொன்றாக காட்டுகிறார். தாயும் மகளும் ஒவ்வொரு கைப்பைகளுக்கும் விளக்கம் கேட்கிறார்கள். பின்னர் தாய் ஒரு பெரிய பையைத் தேர்வுசெய்ய மகளிடம் பரிந்துரைக்கிறார்.
ஆனால் அந்த பெண் ஒரு குட்டிப் பையை காட்டி அதுதான் வேண்டும் என்கிறார். அதன் விலை ரூ.27 லட்சம் என்றபோதும் அதுதான் வேண்டும் என்றார். எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அவரது தாய் அதை வாங்கிக்கொள்ள சொல்கிறார்.
அந்த பை அவ்வளவு முக்கியமானதா என்று கேட்டால், மன்னித்துவிடுங்கள் விடை தெரியவில்லை. காரணத்தை கூறுகிறோம்… நீங்களே முக்கியமா? இல்லையா? என்பதை சொல்லுங்கள்.
திருமணம் செய்துகொள்ளவிருக்கும் அந்த இளம்பெண் தேனிலவின்போது தனது உதட்டுச் சாயத்தை எடுத்துச்செல்வதற்காகதான் இந்த பையாம். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
தான் எவ்வளவு பெரிய பணக்காரர்கள் என்பதைக் காட்டுவதற்காகவே இப்படி செய்கிறார்கள் என்று சிலரும், இதுபோல் வாங்குவது எனதின் நீண்ட கால ஆசை. ஆனால், அதை வாங்குவது எங்களுக்கு கட்டுபடி ஆகாது என்று சிலரும் பதிவிட்டு வருகின்றனர்.
அத்தியாவசியத்தை ஆடம்பரமாக கூட வாங்கலாம்… ஆனால், இங்கு ஆடம்பபரத்தையே இன்னும் ஆடம்பரமாக வாங்குவதுதான் கொஞ்சம் ஓவராக இருக்கிறது. கரெக்ட்தானே மக்களே?