இனி ஆதார் சென்டர் தேடி அலைய வேண்டாம்! கூகுள் மேப்ஸில் வந்தாச்சு புதிய வசதி!

Search Aadhar Centers in Google Maps
Aadhar Centers
Updated on

நாட்டில் தனிநபர் அடையாள ஆவணங்களில் மிக முக்கியமானதாக ஆதார் கார்டு கருதப்படுகிறது. ஆதார் கார்டில் திருத்தங்களை மேற்கொள்ள நாடு முழுவதும் ஆங்காங்கே ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த சேவை மையங்களின் மூலம் பெயர் திருத்தம் மற்றும் முகவரி திருத்தம் உட்பட பல்வேறு திருத்தங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் பலருக்கும் ஆதார் சேவை மையங்கள் எங்கெல்லாம் செயல்படுகின்றன என்பது குறித்த முழு தகவல்கள் தெரியாது.

இந்நிலையில் நாட்டில் எங்கெல்லாம் ஆதார் சேவை மையங்கள் உள்ளன என்பதை துல்லியமாக காட்டும் வகையில், கூகுள் மேப்பில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக கூகுள் நிறுவனம் மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI), பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து ஆதார் சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்க நாடு முழுவதும் ஆதார் சேவை மையங்கள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான அஞ்சல் அலுவலகம் மற்றும் வங்கிகளிலும் ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆதார் கார்டில் திருத்தத்தை மேற்கொள்ள பொதுமக்களுக்கு உதவும் வகையில் ஆதார் சேவை மையங்களின் எண்ணிக்கை அவ்வப்போது அதிகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டும் ஆதார் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நாட்டில் எங்கெல்லாம் ஆதார் கார்டு சேவை மையங்கள் உள்ளன என்பதை கூகுள் மேப்பில் மிக எளிதாக கண்டறிய புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய வசதியின் மூலம் பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு அருகில் உள்ள ஆதார் மையங்களை மிக எளிதில் கண்டுபிடிக்க முடியும்.

நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆதார் சேவை மையங்களை எளிதாக கண்டறியவும், அவற்றின் இருப்பிடம் மற்றும் தினசரி செயல்படும் நேரத்தை துல்லியமாக தெரிந்து கொள்ளவும் இந்த புதிய வசதி உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக மத்திய அரசுடன் கூகுள் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. பெரும்பாலான ஆதார் சேவை மையங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் விதமாக, தினசரி டோக்கன் முறையில் சேவைகள் வழங்கப்படுகின்றன.

ஆகையால் கூகுள் மேப்பில் உங்களுக்கு அருகில் உள்ள ஆதார் சேவை மையங்களை கண்டறிந்து, முன்கூட்டியே டோக்கன் பெற்று, தேவையான ஆதார் சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

புதிய ஆதார் பதிவு, பயோமெட்ரிக் பதிவு, பெயர், முகவரி, மொபைல் நம்பர், பிறந்த, தேதி மற்றும் பாலினம் ஆகியவற்றை திருத்துதல் போன்ற பல்வேறு சேவைகள் ஆதார் சேவை மையங்களில் கிடைக்கின்றன.

இதில் புதிய ஆதார் கார்டை பதிவு செய்ய கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது. பெயரளவு திருத்தங்களை மேற்கொள்ள ரூ.75 கட்டணமாக வசூலிக்கப்படும்.

5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணமின்றியும், 17 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.125 கட்டணத்திலும் பயோமெட்ரிக் புதுப்பிப்பு செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
வழுக்கை தலையில் முடி வளர 20 நாட்கள் போதும்.! ஆராய்ச்சியாளர்களின் அதிரடி கண்டுபிடிப்பு!
Search Aadhar Centers in Google Maps
logo
Kalki Online
kalkionline.com