ஆகஸ்ட் 3 ஆடிப்பெருக்கு: வெளியூர் செல்வோருக்கு 1,610 சிறப்புப் பேருந்துகள் அறிவிப்பு!

ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 3 வரை கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேட்டிலிருந்து தடையற்ற பயணம்; TNSTC சிறப்பு ஏற்பாடு!
ஆடிப்பெருக்கு சிறப்பு பேருந்துகள்
ஆடிப்பெருக்கு சிறப்பு பேருந்துகள்
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

ஆடிப்பெருக்கை ஒட்டி அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 1,610 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து ஜூலை 31ஆம் தேதி 420 பேருந்துகளும், சனிக்கிழமை (ஆகஸ்ட் 1ஆம் தேதி) 330 பேருந்துகளும், ஞாயிற்றுக்கிழமை அன்று (ஆகஸ்ட் 2ஆம் தேதி) 270 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. கோயம்பேட்டில் இருந்து தி.மலை, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு ஜூலை 31ஆம் தேதி 120 பேருந்துகள் எனக் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக வார இறுதி நாட்களில் பயணிகள் வெளியூர் செல்வதற்காக வெள்ளிக்கிழமை 5,720 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். அதேபோல் சனிக்கிழமையும் 2,396 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

வார இறுதி நாட்கள் மற்றும் ஆடி பெருக்கை முன்னிட்டு வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கட்கிழமை ஆகிய 4 நாட்களில் வழக்கமாக இயங்கக்கூடிய பேருந்துகளைக் காட்டிலும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஆடிப்பெருக்கும் முக்கியமானது. இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு ஆகஸ்ட் 3ஆம்தேதி கொண்டாடப்படுகிறது. இதைக் கொண்டாட புதுமணத் தம்பதிகளும், மக்களும் தயாராகி வருகின்றனர். ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படும் மங்களகரமான இத் திருநாளில் நீர்நிலைகளை வழிபடுதல், புதிய தாலிக்கயிறு மாற்றுதல் மற்றும் படையல் இடுதல் ஆகியவை முக்கிய சடங்குகளாக பின்பற்றப்படுகின்றன.

காவிரி நதி போன்ற நதிக்கரைகள் மற்றும் நீர்நிலைகளுக்கு சென்று தீபம் ஏற்றி, மலர்கள் மற்றும் மஞ்சள் குங்குமம் வைத்து நதியை வழிபாடு செய்கின்றனர். எலுமிச்சை, புளியஞ் சாதம், தயிர் சாதம் போன்ற கலவை சாதங்கள், இனிப்புப் பொங்கல் மற்றும் பழங்கள் நைவேத்யமாக படைக்கப்படுகின்றன. இத்திருநாளில் ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதைக் கொண்டாடும் விதமாக இயற்கைக்கும் நீருக்கும் நன்றி செலுத்தப்படுகிறது. இந்நாளில் விதை விதைத்தால் பயிர்கள் செழித்து வளர்ந்து பல மடங்கு பெருகும் என்பதும் நம்பிக்கையாகும்.

இந்நிலையில், ஆடிப்பெருக்கு பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு, பொதுமக்கள் தடையின்றி பயணம் செய்ய தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 1,610 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பயணிகளுக்கு கூட்ட நெரிசல் இன்றி பயணம் செய்ய ஜூலை 31 முதல் ஆகஸ்ட் மூன்றாம் தேதி வரை இந்த பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கும்பகோணம், திருநெல்வேலி, நாகர்கோவில், கோயம்புத்தூர், சேலம், ஈரோடு ஆகிய நகரங்களுக்கு கிளாம்பாக்கத்தில் இருந்தும், திருவண்ணாமலை, ஓசூர், பெங்களூரு போன்ற நகரங்களுக்கு கோயம்பேட்டில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Special bus
Special bus
  1. கிளாம்பாக்கம் முனையத்தில் இருந்து: திருச்சி, மதுரை, கும்பகோணம், திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு:

    • ஜூலை 31 (வெள்ளிக்கிழமை) – 420 பேருந்துகள்

    • ஆகஸ்ட் 1 (சனிக்கிழமை) – 330 பேருந்துகள்

    • ஆகஸ்ட் 2 (ஞாயிற்றுக்கிழமை) – 270 பேருந்துகள்

  2. கோயம்பேடு முனையத்தில் இருந்து: திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு:

    • ஜூலை 31 (வெள்ளிக்கிழமை) – 120 பேருந்துகள்

    • ஆகஸ்ட் 1 (சனிக்கிழமை) – 120 பேருந்துகள்

    • ஆகஸ்ட் 2 (ஞாயிற்றுக்கிழமை) – 65 பேருந்துகள்

கூட்ட நெரிசலைத் தவிர்க்க முன்கூட்டியே பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. முன்பதிவு செய்ய விரும்பும் பயணிகள் டிஎன்எஸ்டிசி(TNSTC) அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் செயலி வழியாக பயணிகள் தங்களின் பயண சீட்டுகளை எளிதாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
பயணிகளுக்கு குட் நியூஸ்..!ஆகஸ்ட் 1 முதல் ‘தட்கல்’ டிக்கெட் விதிகளில் வரப்போகும் அதிரடி மாற்றம்..!!
ஆடிப்பெருக்கு சிறப்பு பேருந்துகள்
இதையும் படியுங்கள்:
ஆடி மாதம்: வழிபாடு முதல் கூழ் செய்வது வரை... தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்!
ஆடிப்பெருக்கு சிறப்பு பேருந்துகள்
logo
Kalki Online
kalkionline.com