ஆம் ஆத்மி கட்சி ஊழலில் சிக்கித் தவிப்பதால் பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்!

Rajkumar Anand
Rajkumar Anand
Published on

ஆம் ஆத்மி கட்சி ஊழலில் சிக்கியதால், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் டெல்லி மாநிலத்தின் சமூக நலன் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்த ராஜ் குமார் ஆனந்த், நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மதுபானக் கொள்கை வழக்கில் சிக்கிய அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பலமுறை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன்கள் அனுப்பப்பட்டன. ஆனால் அவர் ஆஜராகாமல் இருந்ததால், கடந்த மார்ச் 21ம் தேதி இரவு அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

இந்த ஊழல் தொடர்பான வழக்கில் கெஜ்ரிவாலுக்கு எதிராக ஒரு ரூபாய் கூட அமலாக்கத்துறை கைப்பற்றவில்லை என்றும், அவர் பண மோசடி செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறப்பட்டது. 'அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதலமைச்சராக இருக்கும் நிலையில், அதுவும் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அவசர அவசரமாக அவரை கைது செய்தது ஏன்?' என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. இதுபோன்ற பல கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதனையடுத்து நாடு முழுவதும் போராட்டங்களும் வெடித்தன. இந்தநிலையில்தான், ஆம் ஆத்மி அமைச்சர் ராஜ் குமார் ஆனந்த் நேற்று பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் ‘ரோட் ஷோ’ நடத்தும் மாலத்தீவு? காரணம் என்ன?
Rajkumar Anand

இப்போது டெல்லியைப் பொறுத்தவரை ஆம் ஆத்மி கட்சியில் 13 எம்.பிக்கள் உள்ளனர். அந்த 13 பேரில் ஒருவர் கூட பட்டியலினத்தவரோ அல்லது பெண்களோ இல்லை. அதேபோல் பட்டியலின எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு கட்சியில் சிறிதும் மரியாதை என்பதே இல்லை. இந்தக் காரணங்களால்தான் நான் இந்தப் பதவியை ராஜினாமா செய்கிறேன். இனி இந்தக் கட்சியில் தொடரவும் விரும்பவில்லை.” இவ்வாறு அவர் பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com