ஆவின் நிறுவனம் பால், தயிர், இனிப்பு வகைகள் என பல்வேறு பொருட்களைத் தமிழ்நாட்டில் மூலைமுடுக்கில் உள்ள பல லட்சக்கணக்கான நுகர்வோர்களுக்குக் கொண்டு சேர்த்து வருகிறது
ஆவின் பால் போன்று ஆவின் நெய், இனிப்புகளுக்கு பொதுமக்களிடம் வரவேற்பு உள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி ஆவின் நிறுவனம் சிறப்பு இனிப்பு வகைகளை தயாரித்து விற்பனை செய்வது வழக்கம். இந்த முறை புது இனிப்புகள் வருமா என காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. அதாவது ஆவின் பால் பொருட்கள், இனிப்புகள் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது ஆவின் நிர்வாகம்.இந்த புதிய விலை நாள் முதல் (அக்.28) அமலுக்கு வரவுள்ளது.
ஆவின் நிறுவனத்தில் விற்கப்படும் இனிப்புகளுக்கும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது அதன் விலையையும் உயர்த்தப்பட்டுள்ளது
250 கிராம் குலோப்ஜாமுன் ரூ.15 உயர்ந்து ரூ.115 ஆகவும், ரூ.140க்கு விற்ற 250 கிராம் மைசூர்பாக் ரூ. 160 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.பால்கோவா ரூ.20 உயர்ந்து ரூ.150 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வரிசையில், 100 கிராம் ரசகுல்லாவின் விலை 50 ரூபாயாகவும், 200 கிராமின் விலை 95 ரூபாயாகவும், 100 கிராம் கோவாவின் விலை 60 ரூபாயாகவும், 500 கிராமின் விலை 280 ரூபாயாகவும், டேட்ஸ் கோவாவின் விலை 100 கிராம் 65 ரூபாயாகவும், ப்ரீமியம் மில்க் கேக் 250 கிராம் 140 ரூபாயாகவும், நெய் அல்வா 250 கிராம் 125 ரூபாயாகவும், நெய் பாதுஷா 250 கிராம் 205 ரூபாயாகவும், காஜு கத்லி 250 ரூபாய் 280 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தயிர், லஸ்ஸி, பனீர் உள்ளிட்ட முக்கியப் பொருள்களின் விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
500 மி.லி. தயிர் ரூ. 35-ல் இருந்து ரூ. 40 ஆகவும், வெண்ணெய் முறுக்கு 200 கிராம் ரூ. 95, ஆவின் மிக்சர் 200 கிராம் ரூ. 110, மில்க் பேடா 100 கிராம் ரூ. 60, மோர் 100 மி.லி. 10 ரூபாயாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அன்றாடம் பயன்படுத்தப்படும் 200 மி.லி லெஸ்ஸி ரூ.3 அதிகரித்து ரூ.23 ஆகவும், 10 வகையிலான மில்க் ஷேக்குகளின் விலை ரூ.30-லிருந்து ரூ.35 ஆகவும் உயர்ந்துள்ளது. 200 மி.லி மோர் ரூ.8-லிருந்து ரூ.10 ஆகவும், பெட் பாட்டிலில் விற்கும் மோர் ரூ.14 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.வெண்ணெய் குக்கீஸ் 80 கிராம் 40 ரூபாயாகவும், கஸ்டர்ட் குக்கீஸ், கோகனட் குக்கூஸ், சால்ட், ஓட்ஸ் மற்றும் சாகோசிப்ஸ் குக்கீஸ் ஆகியவற்றின் 80 கிராம் தலா 40 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆவின் நெய் :
நெய் லிட்டருக்கு ரூ.80 உயர்த்தி ரூ.780 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.365க்கு விற்ற 500 மி.லி., நெய் 400க்கும், ரூ.160க்கு விற்ற 200 மி.லி., நெய் ரூ.180க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது.100 கிராம் நெய் பாட்டில் ரூ.10 உயர்ந்து ரூ.95-க்கு விற்பனையாகும்.
100 கிராம் வெண்ணெய் ரூ.10 உயர்ந்து ரூ.70 ரூபாயாகவும், 500 கிராமின் விலை ரூ.325 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், அத்தியாவசிய பொருளான பாலின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.