

சென்னையில் புதிய ஆவின் (AAVIN) பாலகங்களை நடத்துவதற்கு ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.நவம்பர் 16ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க ஆவின் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவங்களை ஆவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://aavin.tn.gov.in )இருந்து கட்டணமின்றி பதிவிறக்கம் செய்யலாம்.
அந்த விண்ணப்பித்தை பூர்த்தி செய்து பொது மேலாளார் (விற்பனை) எண்.3A, ஆவின் இல்லம், பசும்பொன் முத்துராமலிங்கனார் சாலை, நந்தனம், சென்னை -600035 என்று முகவரிட்டு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.11.2026
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) சார்பில், சென்னை மாநகரின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் புதிய ஆவின் பாலகங்கள் (Aavin Parlors) மற்றும் விற்பனை நிலையங்களைத் தொடங்க ஆர்வமுள்ளவர்களிடமிருந்து அதிகாரப்பூர்வமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
எந்தெந்த பகுதிகளில் பாலகங்கள்?
சென்னையில் பின்வரும் பகுதிகளில் ஆவின் பாலகங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
1. அண்ணா சாலை
2. வேளச்சேரி
3. தாம்பரம்
4. அசோக் நகர்
5. கொண்டித்தோப்பு
6. சவுகார்பேட்டை
7. கவியரசு கண்ணதாசன் நகர்
8. எம்.எம்.டி.ஏ. காலனி
9. மதுரவாயல்
10. அண்ணா நகர்
11. ஷெனாய் நகர்
12. தியாகராயர் நகர்
13. திருவான்மியூர்
பாலகங்கள் அமைக்க என்ன தகுதி?
▪️ சில்லறை விற்பனைத் துறையில் அனுபவம் இருக்க வேண்டும்.சில்லறை விற்பனைத் துறையில் (Retail Business) முன்அனுபவம் பெற்றிருப்பதுடன், அதற்கான சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
▪️ ஆண்டுக்கு ரூ.25 லட்சம் அளவிலான வரவு செலவுக் கணக்குகள் தொடர்பான நிபந்தனை குறிப்பிடப்பட்டுள்ளது.
▪️ பாலகம் அமைப்பதற்கான இடவசதி மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை விண்ணப்பதாரரே முழுமையாக ஏற்படுத்த வேண்டும். அரசு இலவசமாக கடை ஒதுக்கி தராது.
முதலீடு தொடர்பான முக்கியத் தகவல்:
ஆவின் பாலகத்திற்குத் தேவையான உள்கட்டமைப்புச் செலவுகளைத் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரரே ஏற்க வேண்டும்.
அரசு இலவசமாகக் கடை அமைத்துக் கொடுக்கும் திட்டம் என்று இதைப் புரிந்துகொள்ள வேண்டாம்.
பாதுகாப்பு வைப்புத்தொகை, மொத்த முதலீடு மற்றும் இதர நிதி நிபந்தனைகளை அதிகாரப்பூர்வ விண்ணப்பப் படிவத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
இணையதளம்: https://aavin.tn.gov.in
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
பொது மேலாளர் (விற்பனை),
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்),
எண் 3A, ஆவின் இல்லம்,
பசும்பொன் முத்துராமலிங்கனார் சாலை,
நந்தனம்,
சென்னை – 600035.
தொடர்புக்கு: ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையில் ஈடுபட விரும்புபவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, உரிய காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம். கூடுதல் விவரங்களுக்கு 044-2346 4500 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
விண்ணப்பிப்பதற்கு முன்பு ஆவின் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் முழுமையான நிபந்தனைகளைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.