

தமிழ்நாடு அரசு, பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த, தமிழக அரசு சன்னரக அரிசி, துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கூட்டுறவு மற்றும் அமுதம் அங்காடிகள் மூலம் சந்தை விலையை விடக் குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் பொதுமக்களுக்கு சன்னரக அரிசி குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்வதுடன், அரிசி விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வகையிலும், தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விற்பனையில் யாராவது அதிக விலைக்கு விற்றாலோ, தரமில்லாத அரிசி கொடுத்தாலோ, அல்லது கடையை திறக்காமல் இருந்தாலோ பொதுமக்கள் உடனடியாக புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சன்னரக அரிசியின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள் பெறவும் தமிழ்நாடு அரசு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, சன்னரக அரசியின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு முழுவதும் அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30/-(பொட்டலத்துடன்) என்ற விலையில் சன்னரக அரிசி விற்பனை 17.10.2026 அன்று சென்னையில் முதற்கட்டமாக 30 இடங்களில் தொடங்கப்பட்டது. பின்னர் தமிழ்நாடு முழுவதும் உள்ள அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்திற்கு தேவைக்கேற்ப 5 கிலோ வரை சன்னரக அரிசி வழங்கப்படுகிறது. இதன் மூலம் பொது மக்களுக்கு சன்னரக அரிசி குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்வதுடன், அரிசி விலை உயர்வின் தாக்கத்தைக் குறைக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இத்திட்டத்திற்காக மொத்தம் 995 மெட்ரிக் டன் சன்னரக அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 34 மாவட்டங்களில் செயல்படும் 184 கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் இதுவரை 16 மெட்ரிக் டன் அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 19 விற்பனை நிலையங்கள் மூலம் 1,286 கிலோ அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் திருவல்லிக்கேணி நகர்ப்புற கூட்டுறவுச் சங்கத்தின் (TUCS) மாநகராட்சி வணிக வளாகக் கடை அதிகபட்சமாக 298 கிலோ விற்பனை செய்துள்ளது.
கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ சன்னரக அரிசி ரூ.30-க்கும் மற்றும் தமிழக அரசின் அதிரடி விலை குறைப்பு நடவடிக்கையால் ஒரு கிலோ புழுங்கல் பொன்னி அரிசி ரூ.60-க்கும், மளிகை பொருட்களான துவரம் பருப்பு ரூ.130-க்கும், உளுத்தம் பருப்பு ரூ.140-க்கும், பூண்டு ரூ.240-க்கும், மல்லி(தனியா) ரூ.240-க்கும், மிளகாய் ரூ.330-க்கும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
41 அத்தியாவசியப் பொருட்களின் விலை நிலவரங்களை உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் விலைக் கண்காணிப்பு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
மேலும் அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையைத் தடுக்க தீவிரக் கண்காணிப்பு மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
புகாருக்கு என்ன செய்ய வேண்டும்?
பொதுமக்களுக்கு சன்னரக அரிசி குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்வதுடன், அரிசி விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வகையிலும், தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த விற்பனையில் யாராவது அதிக விலைக்கு விற்றாலோ, தரமில்லாத அரிசி கொடுத்தாலோ, அல்லது கடையை திறக்காமல் இருந்தாலோ பொதுமக்கள் உடனடியாக புகார் தெரிவிக்கலாம்.
மேலும், பொதுமக்கள், விவசாயிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் துறை பணியாளர்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மேலும் எளிதாகவும், விரைவாகவும் தலைமை அலுவலகத்திற்கு நேரடியாக தெரிவிக்கும் வகையில் பிரத்யேகமாக 9884000845 என்ற வாட்ஸ்அப் (WhatsApp) புகார் எண் மற்றும் கூட்டுறவு துறையின் அதிகாரப்பூர்வ குறைதீர்வு எண் (Official Grievance Redressal Number) தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு கடைக்கும் தனித்தனியாக விசாரணை மற்றும் புகார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
- பாரதியார் பண்டகசாலை - 8344114817
- வடசென்னை பண்டகசாலை - 8870349434
- மாநகர காவல் பணியாளர் பண்டகசாலை - 9751980765
- மற்ற 19 கடைகளுக்கும் இதே போல் தனி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த எண்களில் பொதுமக்கள் புகார் அளிக்கும் நிலையில், புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.