மக்கள் ஷாக்..!!அதிரடியாக பால் விலையை உயர்த்திய ‘ஆரோக்யா’..!!

ஆவின் பால் தட்டுப்பாட்டுக்கு இடையே தமிழ்நாட்டில் அதிகம் விற்கப்படும் தனியார் பால் மற்றும் தயிர் விலை திடீரென அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
arokya milk
arokya milkimage credit-a2zshoppy.com
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

தமிழ்நாட்டில், கடந்த ஒரு சில மாதங்களாக ஆவின் பால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், அதற்கடுத்து அதிகம் விற்பனையாகும் தனியார் பாலும் (ஆரோக்கியா பால்) லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்பட்டுள்ளது.

ஆரோக்கியா பால் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், பால் வாங்கும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பால் விலை உயர்ந்தப்பட்டுள்ள நிலையில், தயிர் விலையும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி தனியால் பால் நிறுவனமாக இருப்பது ஆரோக்கியா. ஆரோக்கியா நிறுவனம் பால், தயிர் போன்றவற்றை தமிழகத்தில் விற்பனை செய்து வருகிறது. தமிழகத்தில் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டாலும், சில பகுதிகளில் ஆரோக்கியா பால் விற்பனை இன்றும் இருந்து வருகிறது.

இந்த நிலையில், ஆரோக்கியா நிறுவனம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, பால், தயிர் விலையை உயர்த்துவதாக ஆரோக்கியா நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆரோக்யா பால் விலை உயர்வு
ஆரோக்யா பால் விலை உயர்வு

தமிழ்நாட்டில் சமானிய மக்களின் தினசரி பயன்பாட்டில் இருக்கும் முக்கிய உணவுப் பொருட்களில் பால் முக்கிய இடம் வகிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் பாலைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக தேநீர், காபி, சமையல் மற்றும் காலை உணவுக்குப் பால் மிகவும் அவசியமாகிறது.

இந்த நிலையில், ஆரோக்கியா பால் நிறுவனத்தின் பால் விலை உயர்வு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட ஆரோக்கியா பால் வகையின் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அதன்படி, ஆரோக்கியா பால் விலை ஒரு லிட்டர் ரூ.82 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது ரூ.86 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
லிட்டருக்கு ரூ.80-ஐத் தொட்ட தனியார் பால் விலை: அதிர்ச்சியில் தமிழக மக்கள்!
arokya milk

இதுபோல, தயிர் ஒரு லிட்டர் ரூ.88லிருந்து ரூ.90 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது ஏற்கனவே விலைவாசி உயர்வால் அவதிப்படும் மக்களை மேலும் துயருக்குள்ளாக்கும்.

இதனால், ஆவின் பால் கிடைக்காமல் தனியார் பால் வாங்கும் ஏழை, எளிய மக்கள் இனி அரை லிட்டர் பாலுக்கு ரூ.2 கூடுதலாக செலுத்தும் நிலை ஏற்படும். இதன் மூலம், ஏற்கெனவே பால் வாங்குவதற்காக மாதந்தோறும் கணிசமான தொகையைச் செலவிடும் குடும்பங்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட வாய்ப்புள்ளது.

இதற்கிடையே ஆரோக்கியா பால் விலை உயர்வு காரணமாக டீக்கடைகளில் டீ மற்றும் காபி விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு கப் டீ அல்லது காபியின் விலை வழக்கத்தை விட ரூ.2 முதல் ரூ.5 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

முன்னதாக, மாலை நேரம் வரையிலாவது சில கடைகளில் ஆவின் பால் கிடைக்கும். தற்போது ஆவின் பால்தட்டுப்பாடு காரணமாக இப்போது காலையிலேயே அனைத்து பாலும் விற்பனையாகிவிடுகிறது. இதனால் தனியார் பால் வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுகிறார்கள்.

சென்னையில் தினமும் ஆவின் பால் விற்பனை 16.5 லட்சம் லிட்டருக்கும் அதிகமாக இருந்த நிலையில், கடந்த 6 மாதங்களில் 25 சதவீதத்துக்கும் மேல் குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் ஆவின் பால் விற்பனையை குறைத்து செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி வருவதாக தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கம் குற்றச்சாட்டியிருந்த நிலையில், தனியார் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
#BREAKING பால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு..!!
arokya milk

ஆரோக்கியா நிறுவனம் கடந்த ஜூலை 9-ம்தேதி பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்திய நிலையில் தற்போது மீண்டும் விலை உயர்வை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com