தேர்வு கிடையாது..! ஆவினில் வேலை வாய்ப்பு..!தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க..!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடத்தை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆவின் நிறுவனம்
ஆவின் நிறுவனம்
Updated on

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வு எதுவும் கிடையாது என்றும் விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆகஸ்ட் 13-ம்தேதி அன்று நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் (Aavin) என்பது தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் ஆகும். தமிழகத்தில் 27 மாவட்டக் கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் (District Cooperative Milk Producers' Unions) செயல்படுகின்றன. இவை அனைத்தும் சேர்த்து தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) என்ற ஒரே மாநில அளவிலான முதன்மை நிறுவனத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. இதில் 9,600-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் கிராம மட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

அவ்வப்போது ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அரசு வேலை, கைநிறைய சம்பளம், நிரந்தர வேலை போன்ற சலுகைகள் ஆவின் நிறுவனத்தில் இருப்பதால், பலரும் இந்த வேலைக்கான காத்திருப்பார்கள்.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிமிடெட் நிறுவனம் சார்பில் வெட்னரி கன்சல்டன்ட் (கால்நடை மருத்துவ ஆலோசகர்) புதிய பணிக்கு காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. மேலும், இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை அனுப்புமாறு அறிவித்துள்ளது. இதற்கு தகுதியாக பிவிஎஸ்சி மற்றும் ஏஎச் முடித்து கணினி குறித்து அறிவு பெற்றிருக்க வேண்டும். இரு சக்கர வாகன லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.

aavin|ஆவின் வேலைவாய்ப்பு
aavin|ஆவின் வேலைவாய்ப்புimage credit-justdial.com

தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மூலம் கிராமப்புற தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க பால் உற்பத்தியாளர்களின் கறவை மாடுகளுக்கு, தரமான கால்நடை மருத்துவ வசதி அளிக்கவும், செயற்கை கருவூட்டல், சினைபரிசோதனை, மலடு நீக்க சிறப்பு சிகிச்சை அளிக்கவும், ஒன்றியத்தின் விவகார எல்லைக்குட்பட்ட பட்டுக்கோட்டை சரகத்திற்கு ஒன்றும் மற்றும் தஞ்சாவூர் சரகத்திற்கு ஒன்றும் ஆக மொத்தம் 2 கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

ஆவின் வேலைவாய்ப்பு

பணியிடம் : தஞ்சாவூர்,

பணியின் பெயர்: வெட்னரி கன்சல்டன்ட்,

இதையும் படியுங்கள்:
டிகிரி போதும்... ஆரம்பமே 35,000 சம்பளம்.. இந்தியன் ரெயில்வேயில் 4098 காலிப்பணியிடங்கள்..!!
ஆவின் நிறுவனம்

காலிப்பணியிடங்கள் - 2,

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : ஆகஸ்ட் 13-ம்தேதி

தேர்வு நடக்கும் நேரம் : காலை 11.00 மணி

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஆவின் தலைமையிடம், தஞ்சாவூர்-06.

கல்வித்தகுதி

* கால்நடை மருத்துவ ஆலோசகர் பணி ஒப்பந்த அடிப்படையில் அதாவது, ஓர் ஆண்டிற்கு தற்காலிக பணிபுரியும் வகையில், நிரப்பப்படுகிறது.

* கால்நடை மருத்துவ பட்டப்படிப்பை (B.V.Sc & A.H.) முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

* மருத்துவ கவுன்சில் பதிவுச்சான்று அவசியம்.

* தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

* கிராமப்புறங்களில் உள்ள பால் பண்ணைகளில் முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

* கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

* இருசக்கர வாகனம் மற்றும் 4 சக்கர வாகனம் ஓட்டுவதற்கான லைசென்ஸ் (ஓட்டுநர் உரிமம்) வைத்திருக்க வேண்டும்.

இந்த பணிக்கு தேர்வு எதுவும் கிடையாது என்பதால், தகுதியும், விருப்பமும் உள்ள கால்நடை மருத்துவம் படித்தவர்கள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
#BREAKING : ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க முதல்வர் விஜய் உத்தரவு..!
ஆவின் நிறுவனம்

மேலும் தொடர்புகளுக்கு 04362-255379, 8122665578 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com