அச்சத்தில் ஆந்திராவுக்கு போன் போட்ட மோடி!

Chandrababu Naidu
Chandrababu Naiduhttps://www.onmanorama.com
Published on

டைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலின் வாக்குப் பதிவுகள் எண்ணும் பணி ஏறக்குறைய பாதி அளவு முடிந்த நிலையில், ஆளும் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத சூழ்நிலையே நிலவுகிறது. இதனால் கூட்டணி கட்சிகளின் உதவியோடு ஆட்சியை அமைத்துவிடுவது எனும் முனைப்பில் இறங்கி உள்ளது பாஜக. இந்த நிலையில், ஆந்திர மாநிலம் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திர பாபு நாயுடுவை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி இருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது வரை சுமார் 288 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை பெற்று இருக்கிறது. பாஜக மட்டும் தனியாக 240 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி தனியாக 97 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மொத்தத்தில் இந்தியா கூட்டணி 229 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.

இந்த சூழலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. தனி மெஜாரிட்டி கிடைக்க பாஜகவிற்கு இன்னும் 40 இடங்களுக்கு மேல் கிடைக்க வேண்டும். ஆனால், அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருப்பதாகக் கருதப்படுகிறது. பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் அவர்கள் ஆட்சி அமைப்பது கடினம். அதேபோல், நிதிஷ் குமாரின் ஜேடியூ கட்சி பீகாரில் 15 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆந்திர மாநில சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 14 இடங்களிலும் முன்னிலை பெற்று இருக்கிறது. இவர்கள் தற்போது வரை தேசியக் கூட்டணியில்தான் அங்கம் வகிக்கிறார்கள். என்றாலும், பிரதமர் மோடியுடன் அத்தனை நெருக்கமாக இவர்கள் இல்லை என்றே கூற வேண்டும்.

இந்நிலையில் இவர்கள், மோடி பிரதமர் ஆவதை எதிர்க்கலாம். அல்லது கூட்டணியை முறித்துக்கொண்டு இந்தியா கூட்டணிக்கு செல்ல கூட வாய்ப்பு இருக்கிறது. மேலும் சொல்வதென்றால், இவர்கள் இருவரில் ஒருவரை பிரதமராக முன்னிறுத்தி கூட இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு உண்டு. பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத இந்த நிலையில், பாஜக ஆட்சி அமைக்க தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறதாம். இந்த சூழ்நிலையில்தான் தெலுங்கு தேசம் கட்சி சந்திரபாபு நாயுடுவை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசனை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தெலுங்கு தேசம் மற்றும் ஜேடியூ கட்சிகளுக்கு ஆட்சி அமைப்பதை தீர்மானிக்கும் வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இலங்கையில் காலநிலை மாற்றத்தால் பலி எண்ணிக்கை அதிகரிப்பு!
Chandrababu Naidu

மோடி தொலைபேசி மூலம், ‘தெலுங்கு தேசம் கட்சி இந்தியா கூட்டணிக்கு செல்ல கூடாது. பாஜகவை கைவிடக் கூடாது’ என்று சந்திரபாபு நாயுடுவிடம் கோரிக்கை வைத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சந்திரபாபு நாயுடுவை தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து இருக்கிறார். அது வாழ்த்தா அல்லது ஆதரவு கேட்டா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com