நடிகர் அமீர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!

Ameer
Ameer
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகர் அமீர் மற்றும் அந்த வழக்கில் கைதான ஹிந்தி தயாரிப்பாளரான ஜாஃபர் சாதிக் ஆகியோர் வீடுகளில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை  நடத்தி வருகின்றனர்.

நடிகர் மற்றும் இயக்குனருமான அமீர் முதலில் பருத்திவீரன் படத்தின் தயாரிப்பு விவகாரத்தில் மாட்டிக்கொண்டார். இதில் பல நடிகர்கள் அவருக்கு ஆறுதலாக குரல் கொடுத்தனர். இதனையடுத்து அமீர் மற்றொரு விவகாரத்தில் சிக்கினார்.

இந்தாண்டு பிப்ரவரி மாதம் டெல்லியில் ரூ. 75 கோடி மதிப்பு கொண்ட போதைப் பொருட்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரும், போலீஸாரும் பறிமுதல் செய்தனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்தவுடன் போலீஸார் பல நாட்களாக விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. கடந்த மூன்று ஆண்டுகளாகவே இந்த போதைப் பொருள் கடத்தும் கும்பல் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை கடத்திய விஷயம் தெரியவந்தது. இந்த கும்பலுக்குத் தலைவனாக சினிமா தயாரிப்பாளரான ஜாஃபர் சாதிக் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஜாஃபர் சாதிக் தலைமறைவானார். தீவிர தேடுதலில் ஈடுபட்ட போலீஸார் ஜாஃபரை ஜெய்ப்பூர் மாநிலத்தில் மார்ச் 9ம் தேதி கைது செய்தனர்.

அப்போதுதான் ஜாஃபருக்கும் நடிகர் அமீருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்த அமீர் விசாரணைக்கு ஆஜரானார்.

இந்த வழக்கு நடைபெறும்போது சென்னையில் உள்ள ஜாஃபர் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது. ஜாஃபரின் மனைவி சீலை அகற்றக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதனையடுத்து சீல் அகற்றப்பட்டது.

இதையும் படியுங்கள்:
கோலிவுட் vs டோலிவுட்: அடுத்தடுத்த மாதங்களில் மோதும் படங்கள்!
Ameer

இந்தநிலையில்தான் ஜாஃபர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய பாதுகாப்பு படையினரின் உதவியால் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

அதேபோல் இந்த வழக்கில் அமீருக்கும் தொடர்பு உள்ளது என்று தெரிய வந்ததையடுத்து அவர் அலுவலகத்திலும் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை முற்றிலுமாக முடிந்தவுடனே இதுத்தொடர்பான செய்திகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com