இன்ஸ்டாகிராமில் வைரலாகும் அஜித் வீடியோ..!

ajith
ajithSource:dailythanthi
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

நடிகர் அஜித்குமார் குட் பேட் அக்லி படத்திற்குப் பிறகு கார் ரேஸில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மட்டுமல்லாமல் ஒரு கார்பந்தய வீரராகவும் அனைவரது கவனத்தையும் கவர்ந்து வருகிறார். "Transition Reels" எனும் முறையில் அஜித்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

அண்மைக்காலமாக ஸ்பெயின், அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெற்ற சர்வதேச கார் ரேசிங் போட்டிகளில் பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வரும் இவர் 'அஜித்குமார் ரேசிங்' என்ற தன் சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில்  இந்நிறுவனம் கலந்துகொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது. அத்துடன் இந்த அணி ஐரோப்பிய எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப்பில் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனையும் படைத்துள்ளது.

அஜித் மலேசியாவில் பரபரப்பாக கார் பந்தயங்களில் கலந்து கொண்டு வருகின்றார். அவரை அனிருத், விக்னேஷ் சிவன், நயன்தாரா, சிம்பு, மாதவன், ஜிவி பிரகாஷ் போன்ற  திரைப்பிரபலங்கள் பலரும் சந்தித்து வாழ்த்தி வருகின்றனர். இதற்கிடையில் அஜித்தின் விளம்பர படம், கார் ரேசிங் குறித்தான ஆவணப்படம் ஆகியவை படமாக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அஜித்தினுடைய ஒரு செயல் அவருடைய ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. காரணம் தற்போது இன்ஸ்டாகிராமில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வரும் Transition Reelsல் அஜித்தின் வீடியோ ஒன்றும் தற்போது வெளியாகி உள்ளது. 

பலரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Transition Reels பதிவிட்டு வருகின்றனர். அந்த ட்ரெண்டில் அஜித்தும் இணைந்திருப்பது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் வைரலாகப் பரவி வரும் "Transition Reels"எனும் முறையில் அஜித்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டு, அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அஜித் டிரெண்டிற்கு ஏற்ப மாறி இருப்பதாக ஆச்சரியப்பட்டு, இதுபோன்ற அஜித்தை தான் பார்க்க ஆசைப்படுவதாகவும் கூறி  வருகின்றனர். தற்போது சோஷியல் மீடியாவில் இந்த வீடியோ தான் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:
நான் கிங்மேக்கராக அரசியலுக்கு வரவில்லை.. வெற்றி பெற வந்துள்ளேன் – தவெக தலைவர் விஜய்..!
ajith
logo
Kalki Online
kalkionline.com