திமிருக்கான பரிசு தான் இந்த தோல்வி..விஜய் வெற்றி மற்றும் திமுக தோல்வி குறித்து போஸ் வெங்கட் பேட்டி.!

போஸ் வெங்கட் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளன.
போஸ் வெங்கட்
போஸ் வெங்கட்image credit-puthiyathalaimurai.com
Updated on

தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும், அரசியல்வாதியாகவும் அனைவராலும் அறியப்படும் போஸ் வெங்கட் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளன.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியைக் கைப்பற்றியது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் துருவங்களைச் சுற்றியே சுழன்று வந்த தமிழ்நாட்டு அரசியலில், வெறும் இரண்டரை ஆண்டுகளில் கட்சி ஆரம்பித்து தேர்தலில் இருபெரும் திராவிட கட்சிகளின் 69 ஆண்டு ஆதிக்கத்திற்கு முடிவு கட்டி, தவெக ஆட்சி அமைத்ததன் மூலம் தமிழக அரசியல் முற்றிலும் புதிய பாதையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.

இந்த தேர்தலில் திமுக படுதோல்வியை சந்தித்து, 59 இடங்களில் மட்டுமே வென்று பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்திற்கு தள்ளப்பட்டது. இத்தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட 15 அமைச்சர்கள் தங்கள் தொகுதிகளில் தோல்வியடைந்தனர். திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஹாட்ரிக் வெற்றி பெற்ற கொளத்தூர் தொகுதியிலேயே தவெக வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டார். திமுக செல்வாக்கு மிக்கதாக கருதப்பட்ட சென்னையிலேயே அக்கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

இந்த தோல்வி திமுகவினரை பொருத்தரவை ஒரு அதிர்ச்சிகரமான எதிர்பார்க்காத ஒரு தோல்வியாகவே பார்க்கப்படுகின்றது. ஏனெனில் பெரும்பாலானோர் தொடர்ந்து இரண்டாவது முறையாக திமுக தான் ஆட்சியில் அமரும் என கணிக்கப்பட்டது. அதேபோல் கருத்து கணிப்புகளும் அதையே சொன்னது. ஆனால் அந்த கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி தவெக வெற்றிபெற்றது பலருக்கும் ஆச்சர்யமாகவும் ஒரு சிலருக்கு அதிர்ச்சியாகவும் இருந்தது என சொல்லலாம்.

இதற்கிடையே தோல்விக்கான காரணங்களை கண்டறிய மாநிலம் முழுவதும் கள ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அதற்கான அறிக்கை தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அதில், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை வழங்கியதில் அதிருப்தி, தேர்தலின் போது சரிவர பணியாற்றாமல் ஒதுங்கி இருந்தது போன்ற பல்வேறு காரணங்களை கட்சி நிர்வாகிகள் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். பல தொகுதிகளில் திமுகவினரிடையே ஏற்பட்ட மோதல்கள் மற்றும் உட்கட்சிப் போட்டி வாக்குகள் சிதறலுக்கு காரணமாக அமைந்தன.

மேலும் புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதும், பாரம்பரிய தொண்டர்கள் புறக்கணிக்கப்பட்டதும் அடிமட்ட அளவில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அரசின் மீது வைக்கப்பட்ட ஊழல் புகார்கள் மற்றும் தேர்தல் களத்தில் எழுந்த மக்கள் அதிருப்திகளை முறையாகக் கணிக்கத் தவறியது பின்னடைவை ஏற்படுத்தியது. சில இடங்களில் திமுக உட்கட்சி பிரச்சனையை சரி செய்யவில்லை என்ற கருத்துகளுக்கும் கள ஆய்வுக் குழு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நீண்ட காலமாக திமுகவுடன் பயணித்து வருபவரும், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவருமான போஸ் வெங்கட் திமுகவின் தோல்வி குறித்து தெரிவித்துள்ள கருந்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் விவாதங்களிலும் சமூகப் பிரச்சினைகளிலும் தனது கருத்துகளை வெளிப்படையாகவும் தைரியமாகவும் பகிர்ந்து கொள்வதன் மூலம் அவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.

vijay vs stalin
vijay vs stalinsource:india today

நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கிய காலத்திலிருந்தே அவரை மிகவும் கடுமையாக விமர்சித்து வந்த போஸ் வெங்கட், விஜய் தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு நிலைமை மாறிவிட்டதாக நகைச்சுவையாக பகிர்ந்துள்ளார்.

தேர்தல் முடிவு குறித்து தனது வீட்டிலேயே அனைவரும் தன்னை கலாய்த்ததாகவும், தனது மனைவி, 'என்னவோ பேசினீங்க... இப்போ மக்கள் மனசு எங்கே இருக்குனு பாருங்க' என்று சொன்னதாகவும், தனது மகள் ‘எனக்கு 18 வயசு ஆகியிருந்தா நானும் விஜய்க்குத்தான் ஓட்டு போட்டிருப்பேன்’ என்று கூறியதாகவும் சிரித்தபடி தெரிவித்த போஸ் வெங்கட், ‘நம்ம வீட்டிலேயே நம்மை இப்படி கலாய்க்கிறாங்கன்னா, வெளியே மக்கள் எப்படியெல்லாம் கலாய்ப்பாங்கன்னு அப்பவே யோசிச்சுட்டேன்’ என்று கூறியுள்ளார்.

திமுக தோல்வி குறித்து பேசிய அவர், ‘திமுகவின் தோல்விக்கு அக்கட்சியினரின் திமிரான செயல்பாடுகளும், சிலரின் நடவடிக்கைகளுமே காரணம்’ என்று நடிகர் போஸ் வெங்கட் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
ஆட்சி கவிழ்ந்தால் தேர்தலை சந்திக்க நாங்கள் தயார்! திமுக தயாராக உள்ளதா? – அமைச்சர் அருண்ராஜ்
போஸ் வெங்கட்

திமுகவில் உள்ள சிலர் அதிகாரத்தை தவறாக துஸ்பிரயோகம் செய்ததாகவும், சில இடங்களில் திமுக நிர்வாகிகள் மற்றவர்களை மதிக்காமல் திமிராக நடந்துகொண்டதாகவும் சொல்றாங்க. இருக்கலாம்... அதற்கான பரிசு தான் இந்த தோல்வி. அதை திமுக காரன் கட்டாயமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

அரசியலில் வெற்றியும் தோல்வியும் சகஜம் என்று கூறிய போஸ் வெங்கட், இந்த தேர்தல் முடிவு ஒரு பாடமாக இருக்க வேண்டும். இந்தத் தோல்வியை திமுக நேர்மையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இனியாவது அவர்கள் மக்களின் சக்தியைப் புரிந்து கொண்டு திருந்த வேண்டும் என்றும் அவர் கருத்து கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
“விஜய் ஒரு பாஜக ஜெராக்ஸ் காப்பி!” - எம்எல்ஏக்கள் ஷாப்பிங் விவகாரத்தில் ஸ்டாலின் ஆவேச தாக்கு!
போஸ் வெங்கட்

விஜய்யை கடுமையாக விமர்சித்த ஒருவரே தற்போது மக்களின் தீர்ப்பை மதித்து பேசுவது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ள அதேநேரம் திமுக தோல்விக்கான காரணங்களை வெளிப்படையாகவும், தைரியமாகவும் பேசியிருப்பதும் அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com