நடிகர் விஜய் கட்சி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு பலத்த வரவேற்புடன் தமிழக முதல்வராக பதவியேற்ற நிகழ்வு மக்கள் இடையே மட்டும் மாற்றத்தை தரவில்லை. மாறாக திரையுலகிலும் முன்னணி நடிகர்கள் மனதிலும் நாமும் அரசியலில் அடியெடுத்து வைத்தால் என்ன என்ற மாற்றத்தை தந்துள்ளது எனலாம். அதை நிரூபிக்கும் வகையில் உள்ளது நடிகர் தனுஷ்ன் அறிவிப்புகள்.
நடிகர் தனுஷ் குறித்து தற்போது வெளிவரும் தகவல்களில்அவரது “தனுஷ் நற்பணி மன்றம்” செயல்பாடுகள் சமீபத்தில் தீவிரமாகி வருவதாகவும், அதன் புதிய கொடி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
தனுஷ் புதிய அரசியல் இயக்கம் அல்லது கட்சியைத் தொடங்கியதாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை.எனினும் தனுஷ் ரசிகர் நற்பணி மன்றத்தின் கொடி சமீபத்திய அறிமுகம் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தனுஷ் நற்பணி மன்றத்தின் தொடக்கத்தில் தனுஷ் ரசிகர் நற்பணி மன்றத்தின் பெயரில் புதிய கொடி சென்ற மாதம் (ஜூலை) சமூக வலைதளங்களில் வெளியாகியது. கொடியில் சிவப்பு–வெள்ளை நிறங்கள்,நடுவில் தனுஷின் புகைப்படம்,பின்னணியில் நட்சத்திரச் சின்னம்.“எண்ணம் போல் வாழ்க்கை... எண்ணம் போல் தான் வாழ்க்கை” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் சிவப்பு, வெள்ளை நிறங்களுக்கும் நட்சத்திரச் சின்னத்திற்கும் அதிகாரப்பூர்வ அரசியல் அர்த்தம் எதுவும் தனுஷ் தரப்பில் அறிவிக்கப்படவில்லை.

குறிப்பாக தனுஷ் ரசிகர் நற்பணி மன்றத் தலைவர் சுப்பிரமணியம் சிவா என்பவர் இந்தக் கொடி புதிதாக உருவாக்கப்பட்ட அரசியல் கொடி அல்ல என்று விளக்கியுள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளாகவே இதே கொடியை ரசிகர்கள் திருமணம், காது குத்து விழா, திரைப்பட வெளியீடு போன்ற நிகழ்ச்சிகளில் பயன்படுத்தி வந்துள்ளனர். சமீபத்தில் பழைய கொடியை மாற்றியமைத்து கார்களில் கட்டியதால் அது “புதிய கொடி” என்றும் அரசியல் வருகைக்கான அறிகுறி என்றும் சமூக வலைதளங்களில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார். மேலும் மாவட்ட நிர்வாகிகள், செயலாளர்கள், அமைப்பாளர்களுடன் ஆண்டுதோறும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி மன்றப் பொறுப்புகள் புதுப்பிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
எனினும் தனுஷ் ரசிகர் மன்றங்கள் ஏற்கெனவே திரைப்படக் கொண்டாட்டங்களைத் தாண்டி பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருவது அனைவருக்கும் ஆச்சரியம் தருகிறது. குறிப்பாக ரத்ததான முகாம்கள், கல்வி உதவிகள், மருத்துவ உதவிகள், பேரிடர் நிவாரணப் பணிகள் , பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள்
போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

மேலும், கடந்த சில நாட்களில் தனுஷ் தமிழ் மொழி, கல்வி, தாய்மொழிப் பாதுகாப்பு குறித்து பேசியது கவனம் பெற்றுள்ளது. தனது பள்ளிக்கு புதிய கல்விக் கட்டிடத்தையும் அவர் நிதியுதவியுடன் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய ரசிகர் சந்திப்பு மற்றும் நற்பணி நிகழ்வுகளில் “ரசிகர்களின் ஒற்றுமை சினிமாவுக்கான கொண்டாட்டத்துடன் முடிந்து விடாமல், சமூக நலனுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும்” என்ற அர்த்தத்தில் தனுஷ் பேசியிருப்பதும் அரசியல் விவாதத்தை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் "ஒரு காலத்தில் எம்ஜிஆர் ,காமராஜர் ஒரு காலத்தில் எம் ஜி ஆர் இன்று அந்த வழியில் ஒரு புதிய தலைமுறை .மக்கள் மனதில் இடம் பிடித்தவன் மக்கள் தலைவனாக வருவான் களம் அழைக்குது தலைவன் வருகைக்கான நேரம் நெருங்குது" போன்ற வாசகங்கள் ரசிகர் மன்ற வலைத்தள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டு இருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்ததுள்ளது.
மேலும் தற்போது இந்தியா முழுவதும் 55 தலைவர்களை ரசிகர் மன்றம் சார்பாக இருப்பதாகவும் தமிழ்நாடு முழுவதும் நாற்பதுக்கும் மேற்பட்ட மாவட்டங்களாக பிரித்து மாவட்ட தலைவர்கள் நிர்வாகிகள் நியமனம் செய்திருப்பதாகவும் அதில் இணைய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகிகளை அணுகலாம் என்றும் தனுஷ் அறிவித்துள்ளது அவரது அரசியல் பிரவேசத்துக்கான அடித்தளமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. குறிப்பாக தொகுதி வாரியாக உறுப்பினர் சேர்க்கையை தீவிர படுத்த தனுஷ் அறிவுறுத்தியுள்ளார்.
ஏன் இப்போது தனுஷ் குறித்து அரசியல் பேச்சு அதிகமாகிறது என்பதற்கான பலவிதமான கருத்துக்கள் வலம் வருகின்றன. தமிழகத்தில் சினிமா நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவது புதிதல்ல. குறிப்பாக நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி தேர்தல் களத்தில் இறங்கியுள்ள நிலையில், மற்ற முன்னணி நடிகர்களின் ரசிகர் மன்ற நடவடிக்கைகளும் அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகின்றன.
அதுபோலவே தனுஷின் நடவடிக்கைகள் மற்றும் அவரது அறிவிப்புகளும் அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது என்றும் இல்லை அவருக்கும் அரசியலில் ஆர்வமிருப்பதால் அதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தான் இவைகள் என்றும் இருவித கருத்துக்கள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. இதற்கான பதில் தனுஷிடமே உள்ளது.
மிகப் பெரிய ரசிகர் அடித்தளம் , திரைத்துறையில் வாரிசு நடிகராக அல்லாமல் தனது திறமையால் முன்னேறியவர் என்ற அவரது வாழ்க்கைப் பயணம், சமூகப் பிரச்சினைகளைத் தொடும் திரைப்படங்கள் போன்றவை தனுஷுக்கு இருக்கும் முக்கிய பலங்கள் எனினும் அரசியலில் ஜெயிக்க இவை மட்டும் போதாது என்றும் சொல்லப்படுகிறது. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.