விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்! மீண்டும் இணையும் முதல்வர் விஜய் - சங்கீதா ஜோடி..?

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நாளை வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், முதல்வர் விஜய் மற்றும் சங்கீதா மீண்டும் இணைந்து வாழப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது!
vijay sangeetha
vijay sangeetha image source: filmibeat
Updated on

விஜய், சங்கீதா சொர்ணலிங்கம் விவாகரத்து வேண்டாம் என சமரசமாக பேசி மீண்டும் சேர்ந்துவிட்டதாக தகவல் வெளியாகி தளபதி ரசிகர்களை குஷியாக்கியிருக்கிறது.

முதல்வர் ஜோசப் விஜய்க்கும், நடிகைக்கும் திருமணத்தை மீறிய உறவு இருக்கிறது. அந்த உறவால் என்னை கொடுமைப்படுத்தி வந்தார். 2021ம் ஆண்டும் அந்த உறவை கண்டுபிடித்து கேட்டேன். முதலில் நிறுத்திக் கொள்கிறேன் என்றவர் பின்னர் நிறுத்தவில்லை. அந்த உறவை கைவிட மறுத்ததோடு, தனக்கு பொருளாதார ரீதியாக விஜய் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் சுமூகமாக பிரிய எடுக்கப்பட்ட முயற்சியை விஜய் கண்டுக்கொள்ளாததால், எனக்கு விஜய்யிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் சங்கீதா சொர்ணலிங்கம். தேர்தல் நெருங்கிய சமயத்தில் அதாவது கடந்த பிப்ரவரி மாதம் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவது மனைவி சங்கீதா நீதிமன்றத்தை நாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விஜய் ரசிகர்கள் மற்றும் தவெகவினரை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

இதனிடையே விஜய்யும், திரிஷாவும் திருமணம் ஒன்றுக்கும், அஜித் அம்மா இறந்ததற்கும் ஒன்றாக வந்தார்கள். அது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

நாளை (ஜூன் 15ம்தேதி) செங்கல்பட்டு 1வது குடும்ப நல நீதிமன்றத்தில் இவர்களது விவாகரத்து மனு விசாரணைக்கு வரவுள்ளது. விஜய் முதல்வரான பிறகு முதல் முறையாக இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளதால் இந்த வழக்கு விசாரணை அதிக கவனம் பெற உள்ளது.

இந்நிலையில் தான் அதிரடி திருப்பமாக விஜய், தனது மனைவி சங்கீதாவுடன் சேர்ந்து மீண்டும் வாழ்வது தொடர்பாக பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. அதில் விஜய் மற்றும் சங்கீதா ஆகியோர் குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் குடும்ப காரணங்களுக்காக மீண்டும் இணைந்து வாழ்வது பற்றி பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் திருமண உறவை மீண்டும் புதுப்பிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் 'டாப்' நடிகராக இருந்த விஜய் அரசியல் மீதான ஆர்வத்தால் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி அரசியலில் நுழைந்தார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வரலாற்று சாதனை படைத்து விஜய் தமிழக முதலமைச்சராகி உள்ளார்.

பொது வாழ்க்கைக்கு வந்துவிட்ட விஜய்க்கு குடும்ப பிரச்சனை தான் பெரும் பின்னடைவாக இருந்து வருகிறது என்றே சொல்ல வேண்டும்.

vijay trisha
vijay trisha

அவர் கட்சி துவங்கியதில் இருந்து முதல்வராக பதவியேற்ற நிகழ்ச்சி வரை சங்கீதாவோ, பிள்ளைகள் ஜேசன் சஞ்சய், திவ்யா சாஷாவோ எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. விஜய்யின் பதவியேற்பு விழாவின் போது முக்கியமான ஆட்களான மனைவி சங்கீதா, குழந்தைகள் இல்லாமல் யார் யாரோ முதல் வரிசையில் இருக்கிறார்கள் என்று பலரும் விமர்சித்தார்கள். இந்நிலையில் தான் விஜய்யின் குடும்பம் மீண்டும் சேர இருப்பதாக தகவல் வெளியாகி விஜய் ரசிகர்கள் மற்றும் தவெகவினரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுதொடர்பாக விஜய்- சங்கீதாவை சேர்த்து வைக்க விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் ஒரு சமரசப் பாலமாகச் செயல்பட்டு, தம்பதியினரிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து, உறவில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முயற்சிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதையடுத்து நெருங்கிய உறவுகள் சிலரும் விஜய் மற்றும் சங்கீதாவிடம் பேசி இனிமேல் சேர்ந்து வாழுங்கள் அது தான் உங்களுக்கு நல்லது என்று அறிவுரை கூறியதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.! ஜூன் 15க்கு ஒத்திவைப்பு.!
vijay sangeetha

இவர்களின் விவாகரத்து வழங்கு நாளை (ஜூன் 15ம்தேதி) செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தால் அன்றைய தினம் அதுபற்றி நீதிமன்றத்தில் தெரிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மறுபுறம் விஜய் - சங்கீதா மீண்டும் இணைவது தொடர்பான செய்திகள் ஆங்கில ஊடகங்களில் வெளியாகி இருப்பினும், அவர்கள் மீண்டும் இணைவது குறித்தோ அல்லது விவாகரத்து உறுதியானது குறித்தோ எந்த அதிகாரப்பூர்வ வெளியாகாததால், இச்செய்திகள் தற்போதைய நிலையில் வெறும் ஊகங்களாகவே உள்ளன. திரைக்குப் பின்னால் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டாலும், தற்போதைய நிலைமை தெளிவாக இல்லை. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகும் வரை, விஜய் மற்றும் சங்கீதாவின் திருமண நிலை நிச்சயமற்றதாகவும், சட்டரீதியாகத் தீர்வு காணப்படாத ஒன்றாகவும் தொடர்கிறது.

பல ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்த இந்த தம்பதியினரின் விவாகரத்து விவகாரத்தில், வரவிருக்கும் இந்த நீதிமன்ற விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதையும் படியுங்கள்:
விவாகரத்து கேட்டு சங்கீதா மனு! - உடைந்தது 27 ஆண்டுகால பந்தம்? அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்..!
vijay sangeetha

மேலும் விஜய் வரும் ஜூன் 22ம்தேதி பிறந்தநாள் கொண்டாட உள்ள நிலையில் இருவரும் சேர்ந்து வாழ்வது குறித்து நல்ல முடிவை எடுப்பார்கள் என்று ரசிகர்களும், தொண்டர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com