#BREAKING: விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.! ஜூன் 15க்கு ஒத்திவைப்பு.!

vijay sangeetha
vijay sangeetha image source: filmibeat
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாகவே பிரிந்து வாழ்கின்றனர்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 27-ல் செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கைத் தாக்கல் செய்தார் சங்கீதா. விவாகரத்து வழக்கின் விசாரணை ஏப்ரல் 20ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நான்காவது வழக்காக விசாரணைக்கு வந்த நிலையில், ஜூன் 15ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளார் நீதிபதி.

இதையும் படியுங்கள்:
#BREAKING: அதிமுக அடிமை கட்சி கிடையாது.! பதிலடி கொடுத்த இபிஎஸ்.!
vijay sangeetha

இன்று விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தேர்தல் பிரச்சாரம் காரணமாக விஜய் ஆஜராக மாட்டார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம் சங்கீதா வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் விசாரணையில் ஆஜராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் எனக் கூறி நீதிபதி இந்த வழக்கை ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
#JUST IN: விருதுநகர் வெடி விபத்திற்கு காரணம் இதுதான்.! வெளியானது முதல் தகவல் அறிக்கை.!
vijay sangeetha
logo
Kalki Online
kalkionline.com