நடிகை கனகாவின் தந்தையும், தேசிய விருது பெற்ற இயக்குநருமான தேவதாஸ் உடல்நலக்குறைவால் காலமானார்.!

நடிகை கனகாவின் தாயார் தேவிகா கடந்த 2002 ஆம் ஆண்டில் உயிரிழந்த நிலையில், நேற்று உடல்நலக் குறைவால் தந்தை தேவதாஸும் உயிரிழந்துள்ளார். கனகாவின் தந்தை உயிரிழந்திருப்பது தமிழ் சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Director Devadoss Passed away
Director Devadoss
Published on

ஒரு காலகட்டத்தில் தமிழ்த் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை கனகா. கடந்த 1989 ஆம் ஆண்டு கங்கை அமரன் இயக்கிய கரகாட்டக்காரன் திரைப்படத்தில் ராமராஜனுக்கு ஜோடியாக அறிமுகமானார் நடிகை கனகா. முதல் படமே மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில் நடிகை கனகாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

இவரது தாயார் தேவிகா கடந்த 2002 ஆம் ஆண்டில் உயிரிழந்த நிலையில், நேற்று உடல்நலக் குறைவால் தந்தை தேவதாஸும் உயிரிழந்துள்ளார். கனகாவின் தந்தை உயிரிழந்திருப்பது தமிழ் சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பழங்காலத்து நடிகையான தேவிகா மற்றும் இயக்குநரான தேவதாஸ் ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். எம்ஜிஆர், சிவாஜி மற்றும் ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார் தேவிகா. அதேபோல் இயக்குநரான தேவதாஸ் இயக்கிய ‘வெகுளிப்பெண்’ என்ற திரைப்படம், சிறந்த தமிழ்ப் படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது.

கடந்த 1971 ஆண்டு வெளிவந்த வெகுளிப்பெண் திரைப்படத்தில் ஜெமினி கணேசன் மற்றும் தேவிகா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தேவதாஸ் மற்றும் தேவிகா ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், இவர்களின் மன வாழ்க்கை நீண்ட காலங்களுக்கு நீடிக்கவில்லை. கடந்த 1990 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்ற நிலையில், நடிகை கனகா தனது தாயார் தேவிகாவுடன் தனியாக வசித்து வந்தார்.

அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தார் கனகா. இதில் கரகாட்டக்காரன் திரைப்படத்திற்கு பிறகு மலையாளத்தில் 1994 ஆம் ஆண்டு வெளியான ‘காட்ஃபாதர்’ என்ற திரைப்படம் கனகாவிற்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது. கிட்டத்தட்ட 400 நாட்கள் வரை திரையரங்குகளில் ஓடிய இத்திரைப்படம் மெகா ஹிட் வெற்றியைப் பதிவு செய்தது.

சினிமாவில் வெற்றிகரமான நடிகையாக கனகா வலம் வந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு சோகங்களை சந்தித்திருக்கிறார். தாயாரின் மறைவுக்குப் பிறகும் தனிமையிலேயே வசித்து வந்த கனகா, அதன்பிறகு திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இந்நிலையில் கனகாவிற்கு ஒரே உறவாக இருந்த தந்தையும் உயிரிழந்திருப்பது, அவருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
இந்த இரண்டு நடிகர்களைப் பார்த்து சூப்பர் ஸ்டாரே பயந்தாராம்! ஏன் தெரியுமா?
Director Devadoss Passed away

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பல வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், கனகா நடிப்பதை அவர் தந்தையான தேவதாஸ் விரும்பியதில்லை. மேலும் கனகா நடித்த படங்களை இதுவரை அவர் பார்த்ததே இல்லை எனவும் சமீபத்திய பேட்டியொன்றில் தெரிவித்து இருந்தார்.

கனகா படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று தான், அவருடைய தந்தை விரும்பினார். இருப்பினும் நடிப்பில் ஆர்வம் கொண்ட கனகா, சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார். 88 வயதாகும் இயக்குநர் தேவதாஸ், உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார் இயக்குநர் தேவதாஸ்.

இதையும் படியுங்கள்:
“உனக்கு சினிமா முகம் இருக்கு” - பாக்யராஜ் சொன்ன 8 வயது சிறுமி யார்?
Director Devadoss Passed away

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com