

மதுரையில் நடிகை திரிஷாவை அரசியலுக்கு வரவேற்கும் விதமாக நகரின் பல்வேறு பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
மதுரையில் நடிகை திரிஷாவுக்கு முதன்முறையாக நற்பணி மன்றம் தொடங்கப்பட்டு, அவரை அரசியலுக்கு வரவேற்கும் வகையிலும், வீரமங்கை வேலுநாச்சியார் வழியில் செயல்படக் கோரியும் நகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பெரும் பேசும் பொருளாகியுள்ளது.
நற்பணி மன்ற துவக்கம்:
மதுரையில் த்ரிஷாவுக்காக முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக புதிய மன்றம் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அத்துடன் த்ரிஷாவை அரசியலுக்கு வரவேற்கும் வாசகங்களும் அதில் இடம்பெற்றுள்ளன. தமிழக சங்க வரலாற்றில் முதல் முறையாக எங்கள் அன்பு அக்கா த்ரிஷாவிற்கு தமிழக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கம். தமிழக வீரமங்கை வேலுநாச்சியார் வழியில் என்ற வாசகங்கள் அதில் முழக்கம் இடப்பட்டுள்ளன. "அன்பு அக்கா த்ரிஷா" என்றும், தமிழக அரசு அங்கீகரித்த முதல் சங்கம் என்றும், வேலுநாச்சியார் வழியில் பயணிக்கக் கோரியும் வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளது. இந்த நடிகை திரிஷா நற்பணி மன்றம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழக வீரமங்கை வேலுநாச்சியார் வழியில்... என்ற வாசகத்தை குறிப்பிட்டு த்ரிஷாவை வீரமங்கையாக அவரது ரசிகர்கள் சித்தரித்துள்ளனர். "தமிழக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கம்" என்ற வினோதமான வாசகமும் இதில் இடம் பெற்றுள்ளது. நடிகை திரிஷாவை தீவிரமாக அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது இந்த ரசிகர்களின் போஸ்டர். அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ரசிகர் மன்றமா? என நெட்டிசன்கள் பலரும் இந்த போஸ்டர் வாசகங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து விவாதித்து வருவதால் இது மீடியாக்களில் பெரும் விவாதப் பொருளாக மாறி உள்ளது.
தமிழக அரசியலில் திரைப்பட நட்சத்திரங்களுடைய வருகை ஒன்றும் புதிதல்ல. கடந்த பல தசாப்தங்களாகவே சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து பல முக்கிய தலைவர்கள் மக்கள் மத்தியில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர். அந்த வகையில் மதுரை மாநகரில் நடிகை திரிஷாவை அரசியலுக்கு வரவேற்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இவை நகரின் முக்கிய சாலைகள், பேருந்து நிறுத்தங்கள், சந்திப்புகள், வணிக வளாகங்கள் அருகிலும், மக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. 22 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் கொடிகட்டி பறந்து வரும் இவரைப் பற்றி சமீப காலமாக சர்ச்சைகள் அதிகரித்துள்ளன. த்ரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமல்லாது திரையுலக வாழ்க்கை குறித்தும் அவ்வப்போது பரபரப்பு கிளம்பி வருகிறது. சமீபத்தில் நடிகை திரிஷா அரசியலில் ஈடுபடத் தயாராகி வருவதாகவும் இணையதளங்களில் தகவல் பரவியது. இதற்கு அவர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் மதுரையில் த்ரிஷாவை அரசியலுக்கு வரவேற்கும் விதமாக நகரின் பல்வேறு பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
போஸ்டர்களில், "மீனாட்சி தாய் ஆசீர்வாதத்தால்... தமிழக அரசியலுக்கு வருக! நடிகை திரிஷா அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்!" போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் த்ரிஷாவுடைய பெரிய புகைப்படத்துடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் உருவப்படமும் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வாசகங்கள் அரசியல் வட்டாரங்களில் பெருத்த விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்ட வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றது. உண்மையிலேயே த்ரிஷா அவர்கள் அரசியலுக்கு வருவாரா? அல்லது இது ரசிகர்களுடைய ஆசையா? முயற்சியா? அல்லது இதில் ஏதேனும் அரசியல் அமைப்பின் பின்னணி இருக்கிறதா? என்ற பல கேள்விகளுடன், சந்தேகங்களுடன் பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
சங்க தமிழ் வளர்த்த மதுரையில் இப்படி ஒரு போஸ்டரா? வீரமங்கை வேலுநாச்சியாருடன் ஒப்பிடுதலா என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.