

கிரிக்கெட் வீரர் விராட் கோலி இணை உரிமையாளராக இருந்த பெங்களூருவில் உள்ள 'ஒன்8 கம்யூன்'(One8 Commune) உணவகம், வாடகை செலுத்தத் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் நீதிமன்ற உத்தரவு உள்ளிட்ட சட்ட மற்றும் நிதிச் சிக்கல்களைத் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு அருகில் எம்.ஜி.ரோடு லாவல்லி ரோடு பகுதியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட்கோலிக்கு சொந்தமான ‘ஒன்8 கம்யூன்’ என்ற ஓட்டல் உள்ளது. இந்த டிசம்பர் 2023-ல் திறக்கப்பட்டது.
இந்த ஓட்டலில் தீ பாதுகாப்பு விதிகள் சரியாக பின்பற்றப்படவில்லை என கூறி கடந்ததாண்டு (2025) மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். அதாவது, தீயணைப்புத் துறையிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் (NOC) உள்ளிட்ட கட்டாய அனுமதிகள் இல்லாமல் அந்த உணவகம் செயல்படுவதாகக் குற்றம் சாட்டி மாநகராட்சி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்த விவகாரத்தால் விராட் கோலிக்கு நெருக்கடி ஏற்பட்டது.
மேலும் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகு இயங்கியதற்காக, எம்.ஜி. சாலையில் உள்ள மற்ற நிறுவனங்களுடன் சேர்த்து ஒன்8 கம்யூன் மீதும் மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனால் விராட் கோலி அந்த நிறுவனத்தில் இருந்து விலகியதாகவும், ஓட்டலில் இருந்து ‘ஒன்8’ என்ற பெயரை நீக்குமாறு கூறியதாகவும் தெரிகிறது. அதன்படி ஓட்டலில் இருந்து ‘ஒன்8’ என்ற பெயர் நீக்கப்ப்ட்டது. அதன்பிறகு அந்த ஓட்டலின் வணிகம் கடுமையாக சரிந்தது. வாடிக்கையாளர்கள் வருகை மற்றும் வருவாயில் ஏற்பட்ட சரிவு, அந்த நிறுவனத்தை நிதி நெருக்கடிக்கு தள்ளியது.
இதன் காரணமாக 6 மாதங்களுக்கும் மேலாக வாடகை செலுத்தாதது உட்பட, பராமரிப்பு கட்டணங்களை செலுத்துவதை கடினமாக்கியதுடன், ஊழியர்களுக்கு சம்பளமும் கொடுக்க முடியாமல் போனது. வாட நிலுவை தொகையை செலுத்தாத காரணத்தினால், கட்டிட உரிமையாளர் உணவகத்தின் மீது கோட்டில் வழக்குத் தொடர்ந்தபோது நிலைமை சட்டரீதியாக விஸ்வரூபம் எடுத்தது. செலுத்த வேண்டிய வாடகை நிலுவைத் தொகை 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிமன்ற உத்தரவுகளின்படி, நிலுவையில் உள்ள தொகைகள் செலுத்தப்படும் வரை அந்த உணவகம் மூடப்பட்டிருக்கும் என அறிவித்தது. இந்த நிலையில் வாடகை பிரச்சனை கட்டிட உரிமையாளரின் சட்ட நடவடிக்கை மற்றும் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட உரிமையாளர் இறுதியில் ‘ஒன்8’ ஒட்டலை மூடிவிட்டார்.
பெங்களூரு கிளையானது, இந்தியா முழுவதும் உள்ள பல ஒன்8 கம்யூன் கிளைகளில் ஒன்றாகும்; டெல்லி, மும்பை, புனே மற்றும் கொல்கத்தாவிலும் இதன் மற்ற கிளைகள் உள்ளன.