உள்நாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள் அனைவரும் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ கூறியிருந்த நிலையில், விராட் கோலி இதுகுறித்தான முக்கிய முடிவை எடுத்துள்ளார்.
இந்த ஆண்டு பிப்ரவரியில் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னர் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் நடைபெறுகிறது. இதற்காக இங்கிலாந்து அணி இந்தியா வந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டிக்கு பின்னர் இந்திய அணி வீரர்கள் ஓய்வில் இருந்தனர். இப்போது இங்கிலாந்துடன் விளையாடுகின்றனர். கிட்டத்தட்ட இங்கிலாந்து உடன் விளையாடும் இந்திய வீரர்களே சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடுகின்றனர்.
இதற்கிடையே ரஞ்சி கோப்பை தொடரின் (Ranji Trophy 2025) இரண்டாம் கட்ட போட்டிகள் வரும் ஜன. 23ஆம் தேதி தொடங்குகின்றன.
இப்படி இந்திய வீரர்கள் அனைத்து போட்டிகளிலும் கலந்துக்கொள்ளும் கட்டாயத்தில் உள்ளனர். அதுவும் சர்வதேச போட்டிகளில் விளையாடும் வீரர்கள் கண்டிப்பாக உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ அறிவித்திருக்கிறது. அது யாராக இருந்தாலும் சரி என்று பிசிசிஐ திட்டவட்டமாக பேசியிருக்கிறது. இந்த செய்தியை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வில்லை என்றாலும், வீரர்களிடம் தனிப்பட்ட முறையில் கூறியதாக தெரியவந்துள்ளது.
ஆகையால் ரஞ்சி ட்ராபியில் முக்கிய வீரர்கள் விளையாடவுள்ளனர். கேப்டன் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோர் களமிறங்குகின்றனர். அந்த வகையில் ஜன.23ம் தேதி நடைபெறும் டெல்லி - சௌராஷ்டிரா அணிகளில், டெல்லி அணி சார்பில் ரிஷப் பண்டும், சௌராஷ்டிரா அணி சார்பில் ஜடேஜாவும் விளையாட உள்ளனர். ரோஹித், ஜெய்ஸ்வால் ஆகியோர் மும்பை அணிக்காகவும், கில் பஞ்சாப் அணிக்காகவும் களமிறங்க உள்ளனர்.
ஆனால், விராட் கோலி மட்டும் பங்ககேற்பாரா என்பது தெரியாமல் இருந்து வந்தது. விராட் கோலி டெல்லி அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால், இவருக்கு கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டிருப்பதாக சொல்லி சௌராஷ்டிரா அணிக்கு எதிராக விளையாடமாட்டார் என்று கூறி வந்த நிலையியில், விராட் கோலி ஒரு முக்கிய முடிவை எடுத்திருக்கிறார்.
தற்போது ரஞ்சி கோப்பையில் விளையாடுவதற்கு விராட் கோலி முடிவு செய்துள்ளார் என தெரிய வருகிறது.
அதாவது, ஜன.30ஆம் தேதி தொடங்கும் டெல்லி - ரயில்வேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் விராட் கோலி விளையாட உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை டெல்லி அணியின் பயிற்சியாளர் உறுதி செய்துள்ளார்.
இதன்மூலம் விராட் கோலி 12 ஆண்டுகளுக்கு பிறகு ரஞ்சி ட்ராபியில் விளையாடவுள்ளார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று….