மக்களே உஷார்.!! இனி லேட்டா வந்தா வேலை காலி.. அதிரடி காட்டும் AI மேலாளர்.!

அமெரிக்காவில் AI மேலாளரால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்: வேலைவாய்ப்பு சந்தையில் புதிய சர்ச்சை.
AI மேலாளர்
AI Manager
Updated on

உலகளவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தின் வரவுக்குப் பிறகு, பல முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு ஆட்குறைப்பு நடவடிக்கை அதிகமானது.

கடந்த 2020-ம் ஆண்டுக்குப் பிறகு உலகளவில் வேலையை இழந்தோரின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டியுள்ளது. நிறுவனத்தின் நஷ்டத்தை ஈடு செய்ய சில நிறுவனங்கள் வேலையிழப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றன. சில நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பல ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கினர்.

இந்நிலையில் அமெரிக்காவில் முதன்முறையாக ஏஐ தொழில்நுட்ப மேலாளர், ஊழியரை பணி நீக்கம் செய்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய பல நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வரும் நிலையில், ஏஐ மேலாளரே பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
ஆதார் சேவையிலும் ஏஐ தொழில்நுட்பம்..! வரப்போகுது புதிய மாற்றம்..!
AI மேலாளர்

அமெரிக்காவில் உள்ள ஒரு சில்லறை விற்பனை கடையில் மேலாளர் பணிக்கு ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட 'லூனா' (Luna) என்ற ஏஐ மேலாளருக்கு வரவு - செலவு கணக்கு முதல் நிர்வாகம் செய்வது வரையிலான அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டன.

தொடர்ந்து தனது பணியை செய்து வந்த லூனா ஏஐ மேலாளர், ஊழியர்களின் அனைத்து தகவல்களையும் துல்லியமாக திரட்டியது. அதில் அடிக்கடி வேலைக்கு தாமதமாக வந்த ஊழியர் ஒருவரை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது ஏஐ.

இந்த ஊழியர் பணி நேரத்தில் அடிக்கடி வெளியில் செல்வதையும் லூனா ஏஐ மேலாளர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தகவல் அனைத்தையும் மேலதிகாரிகள் சரிபார்த்துள்ளனர்.

தற்போது ஏஐ தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் மேலோங்கி வருவதால், ஊழியர்கள் அதற்கேற்றவாறு தங்களைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும். அமெரிக்காவின் சில்லறை கடையிலேயே ஏஐ மேலாளர் நியமிக்கப்பட்டிருப்பதால், விரைவில் பல முன்னணி நிறுவனங்களில் ஏஐ பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்த சம்பவத்தை மற்ற ஊழியர்கள் எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு, கவனமுடன் பணியாற்றுவது நல்லது. குறிப்பாக வேலைக்கு சரியான நேரத்திற்கு சென்று விடுங்கள். இல்லையெனில் கேள்வியே இன்றி உங்களை ஏஐ தூக்கி விடும். ஏஐ தொழில்நுட்பத் துறையில் திறமைகளை வளர்த்துக் கொள்வதும், ஏஐ தொழில்நுட்பத்தைக் கையாள்வதுமே வருங்காலத்தில் வேலையில் நிலைத்து நிற்க உதவும் என வல்லுநரகள் கூறுகின்றனர்.

AI மேலாளர்
Layoff
இதையும் படியுங்கள்:
பொதுமக்களுக்கு உதவும் ஏஐ டாக்டர்.! மாநில அரசின் மாஸ்டர் பிளான்.!
AI மேலாளர்

பொதுவாக வேலைக்கு செல்லும் ஊழியர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றாலோ அல்லது அடிக்கடி வேலைக்கு தாமதமாக வந்தாலோ மேலாளரிடம் அனுமதி வாங்க வேண்டியிருக்கும். மேலாளர்கள் மனிதர்களாக இருந்த வரையில், ஊழியர்களின் சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு கடினமான நேரங்களில் நமக்கு ஆதரவாக இருப்பார்கள்.

ஆனால் ஏஐ மேலாளரிடம் எவ்வித ஆதரவையும் நம்மால் எதிர்பார்க்கவே முடியாது. ஏனெனில் டேட்டாக்களை மட்டுமே வைத்து துல்லியமாக பணியாற்றும் ஏஐ தொழில்நுட்பம், நீங்கள் வேலைக்கு தாமதமாக வந்தாலோ அல்லது வேலை செய்யவில்லை என்றாலோ அனைத்து டேட்டாக்களையும் ஏஐ மேலாளர் துல்லியமாக கண்காணித்து, மேலதிகாரிகளுக்கு ரிப்போர்ட்டை வழங்கி விடுவார்.

ஏஐ மேலாளர்களிடம் இனி ஊழியர்கள் தப்பிக்கவே முடியாது. சரியான நேரத்திற்கு பணிக்கு வந்து, தங்களது வேலையை சரியாக செய்வது மட்டுமே இனி ஊழியர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு.

logo
Kalki Online
kalkionline.com