புகழ்பெற்ற அறிஞரும் எழுத்தாளருமான யுவால் நோவா ஹராரி ஏஐ தொடர்பாக மிகவும் முக்கியமான கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்.
இன்று செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் அத்தியாவசிய ஒன்றாக மாறிவருகிறது. சாதாரண மக்கள் வரை தனது போனில் எளிதாக AI பயன்படுத்துகிறார்கள். தங்களது சந்தேகங்களையும், தங்களது கற்பனைகளையும் AI யிடமே பகிர்ந்துக்கொள்கிறார்கள். அதேபோல் இப்போது உள்ள குழந்தைகளுக்கு சிறந்த கேம் பார்ட்னர் AI. இவையனைத்தையுவிட AI மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்களே நல்ல வரவேற்பை பெறுகின்றன. இந்த படங்களையே பலரும் பயன்படுத்துகின்றனர்.
இப்படி AI ஒருபக்கம் மனிதர்களுக்கு மிகவும் உதவியாக இருக்க, மறுபக்கம் இதன் அபாயங்கள் குறித்தும் பலர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
விரைவில் இந்த உலகமே ஏஐ உலகமாக மாறிவிடுமோ என்று அஞ்சப்படுகிறது.
அந்தவகையில், ஏஐ தொழில்நுட்பங்கள் குறித்து மும்பையில் பேசிய யுவால் நோவா ஹராரி, “ஏஐ என்பது ஒரு கருவியல்ல, அது ஒரு ஏஜென்ட். அதுவே தனது செயல்பாடுகளை உருவாக்கி நிர்வகிக்கும் திறன் பெற்றுள்ளது. புத்தகமோ அல்லது அச்சகமோ நமது கட்டுப்பாட்டிலிருந்து தப்பிக்க முடியாது. ஆனால், ஏஐ தனது உருவாக்கத்தால் நம்முடைய கட்டுப்பாட்டில் இருந்து விலகி நம்மையே கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. ஆனால், நாம் அதனை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வருவது மிகவும் கடினம்.
கடந்த 2016ம் ஆண்டு ஆல்பா கோ எனும் ஏஐ, கோ விளையாட்டின் உலக சாம்பியனையே தோற்கடித்தது. அது முற்றிலும் புதுமையான நுனுக்கங்களை உருவாக்கியது. இதுவே ஏஐயின் சுய கற்றல் மற்றும் மேம்படுத்துதலை வெளிப்படுத்தியது. மனிதர்களை போலவே ஏஐயும் தன்னை மேம்படுத்திக் கொள்கிறது.
ஏஐ டெக்ஸ்ட், இமேஜ், வீடியோ ஆகியவற்றை மிகவும் விரைவாகவும் புதியதாகவும் உருவாக்கி வருகிறது. இதனால் பல சவால்களையும் பிரச்னைகளையும் சந்திக்க நேரிடும். ஆகையால் இதற்கான முறையான சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம்.
தீவிரவாத ஒழிப்புக்கு பல சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால், அது குறிப்பிட்ட ஒரு சமுதாயத்திற்குதான். அப்படியிருக்கும்போது ஒட்டுமொத்த மனித குலத்துக்கே ஆபாத்தாக உருவாகும் ஏஐ தொழில்நுட்பத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள சட்டங்கள் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.