பொங்கல் பண்டிகையை ஒட்டி விமான கட்டணங்கள் உயர்வு!

Airplane
Airplane
Published on

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விமான கட்டணங்கள் உயர்ந்துள்ளதாக செய்திகள் பரவிய நிலையில், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழர்களின் தைப்பொங்கல் வரும் 14ம் தேதி தொடங்கவுள்ளது. கிட்டத்தட்ட இப்போதே கலைகட்ட ஆரம்பித்துவிட்டது. அடுத்த வாரம் இறுதிவரை தமிழக மக்களை கையிலேயே பிடிக்க முடியாது. பள்ளிகள் கல்லூரிகளுக்கு கூட விடுமுறை அதிக நாட்கள் என்பதால் அவர்களையும் கையில் பிடிக்க முடியவில்லை. இப்படி தமிழகமே உற்சாக வெள்ளத்தில் இருக்கிறது.

இப்படியான நிலையில், வெளியூர் சென்று வேலை செய்பவர்கள் எல்லாம் தங்கள் ஊருக்குச் செல்லும் நேரமும் வந்துவிட்டது.  நேற்று ஒரு நாள் மட்டும் சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சுமார் 1.30 லட்ச மக்கள். இதனையடுத்து இன்னும் மூன்று நாட்கள் பொங்கலுக்கு உள்ள நிலையில், இன்னும் எவ்வளவோ மக்கள் சொந்த ஊருக்குச் செல்வார்கள்.

இதையும் படியுங்கள்:
‘குந்தாணி’ அப்படின்னா என்ன தெரியுமாங்க?
Airplane

அதுவும் பேருந்து, ரயில், விமானம் என அனைத்திலும் மக்கள் நிரம்புவார்கள். இதுதான் நேரம் என்று பேருந்தில் எப்போதும் கட்டணம் உயர்த்துவார்கள். வேறு வழியில்லாமல் மக்களும் அவர்கள் கேட்கும் கட்டணம் செலுத்தி சொந்த ஊருக்குத் திரும்புவார்கள்.

பல மடங்கு கட்டணம் உயரும். இதுகுறித்து சமீபத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இப்படியான நிலையில், தற்போது விமான கட்டணமும் அதிகரித்திருக்கிறது. அந்தவகையில் விமான கட்டணம் குறித்துப் பார்ப்போம்.

சென்னை – மதுரை:

வழக்கமான கட்டணம்: 3,999

இன்றைய கட்டணம்: 17,645

சென்னை – திருச்சி:

வழக்கமான கட்டணம்: 2,199

இன்றைய கட்டணம்: 14, 337

சென்னை – கோவை

வழக்கமான கட்டணம்: 3,485

இன்றைய கட்டணம்: 16, 647

சென்னை - தூத்துக்குடி

வழக்கமான கட்டணம் - ரூ.4,199

இன்றைய கட்டணம் - ரூ.12,866

இதையும் படியுங்கள்:
பணியிடத்தில் சமத்துவம் நிலவ எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்!
Airplane

சென்னை - திருவனந்தபுரம்

வழக்கமான கட்டணம் - ரூ.3,296

இன்றைய கட்டணம் - ரூ.17,771

சென்னை - சேலம்

வழக்கமான கட்டணம் - ரூ.2,799

இன்றைய கட்டணம் - ரூ.9,579

எனவே, இப்படி பல மடங்கு விமான கட்டணம் உயர்ந்துள்ளது மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், பேருந்து, ரயில் முன்பதிவு செய்யாதவர்கள் வேறு வழியில்லாமல் விமானத்தில் இவ்வளவு கட்டணம் கொடுத்தே புக் செய்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com