

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல், தனது வாடிக்கையாளர்களின் பொழுதுபோக்கு அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் ஒரு புதிய டாப்-அப் திட்டத்தை அறிவித்துள்ளது. மிகக் குறைந்த கட்டணத்தில் ஏராளமான பொழுதுபோக்கு தளங்களை வழங்கும் நோக்கில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் (Prepaid) வாடிக்கையாளர்களுக்கு விளம்பரமில்லாத யூடியூப் அனுபவத்தை வழங்கும் பொருட்டு, யூடியூப் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி இந்நிறுவனம், யூடியூப் (YouTube) உடன் இணைந்து தனது ரூ. 200 ப்ரீபெய்ட் ஓடிடி (OTT) டாப்-அப் பேக்கில் 'பாக்ஸ் ஆபிஸ்' (Box Office) ஓடிடி மற்றும் டேட்டா பேக்கில் 30 ஜிபி டேட்டாவுடன் கூடுதல் சலுகையாக யூடியூப் பிரீமியம் (YouTube Premium) சந்தாவை இணைத்துள்ளது.
இதன் மூலம் ஏர்டெல் பயனர்கள் ரூ.200 மதிப்புள்ள இந்த புதிய டாப்-அப் ரீசார்ஜ் செய்வதன் மூலம், பல்வேறு முன்னணி ஒடிடி தளங்களை ஒரே கட்டணத்தில் பெற முடியும் என்பதுடன், விளம்பரங்கள் இன்றி வீடியோக்களைப் பார்க்கவும், இசையைக் கேட்கவும், தங்களுக்குப் பிடித்த படைப்பாளர்களைப் பின்தொடரவும் முடியும். இந்தச் சேவையை ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக, ஏர்டெல் நிறுவனம் யூடியூப்புடன் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. Airtel-ன் ஏற்கனவே உள்ள பொழுதுபோக்குச் சேவைகளுடன் இப்போது YouTube Premium சந்தாவும் இணைந்துள்ளது.
YouTube Premium சந்தா, YouTube தளத்தில் காட்டப்படும் வழக்கமான வீடியோக்கள் மற்றும் Shorts-களில் உள்ள விளம்பரங்களை நீக்குகிறது. மேலும், பிற செயலிகளைப் பயன்படுத்தும்போது, வீடியோக்களைத் தொடர்ந்து இயக்க அனுமதிக்கிறது. பயனர்கள் வீடியோக்களைப் பதிவிறக்கம் செய்து, இணைய வசதி இல்லாத நேரத்திலும் பார்த்துக்கொள்ளலாம். இதனால் பயனர்கள் தங்களுக்குப் பிடித்தமான திரைப்படங்கள், தொடர்கள் மற்றும் வீடியோக்களை எந்தவிதத் தடையுமின்றி பார்த்து மகிழலாம்.
பொழுதுபோக்கு சேவைகளுடன் சேர்த்து, வாடிக்கையாளர்களின் இணையத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் கூடுதலாக 30 ஜிபி அதிவேக டேட்டாவும் வழங்கப்படுகிறது. மொபைல் டேட்டா பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில், வாடிக்கையாளர்களின் பொழுதுபோக்குத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஏர்டெல் இந்த சலுகையைக் கொண்டு வந்துள்ளது.
ஏர்டெல் ரீசார்ஜ் - ரூ.200 பேக்கின் முக்கிய அம்சங்கள்:
* இந்த டாப்-அப் பேக் மூலம் பயனர்களுக்கு 30 GB கூடுதல் மொபைல் டேட்டா வழங்கப்படுகிறது.
* தகுதியான ஏர்டெல் 5G சாதனங்கள் மற்றும் 5G சேவை கிடைக்கும் பகுதிகளில் வரம்பற்ற (Unlimited) 5G டேட்டா கிடைக்கும்.
* இதில் யூடியூப் பிரீமியம் (YouTube Premium) மற்றும் பிற ஓடிடி நன்மைகள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த புதிய சலுகையின் மூலம், Airtel பயனர்கள் YouTube வீடியோக்கள் மற்றும் Shorts-களை விளம்பரங்கள் இன்றிப் பார்க்கலாம், வீடியோக்களைப் பின்னணியில் (background) இயக்கலாம், ஆஃப்லைனில் பார்ப்பதற்காக பதிவிறக்கம் செய்யலாம் மற்றும் YouTube Music Premium-ஐப் பயன்படுத்தலாம்.
பேக் காலாவதியான பிறகு, வாடிக்கையாளர்கள் பொருந்தக்கூடிய விதிமுறைகள் மற்றும் தகுதி நிபந்தனைகளுக்கு உட்பட்டு, மீண்டும் டாப்-அப் செய்து யூடியூப் பிரீமியம் பலனை மீட்டெடுத்து சேவையைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.
* இந்தத் OTT டாப்-அப் திட்டத்தின் செல்லுபடியாகும் (Validity காலம் 28 நாட்கள் ஆகும்.
* கூடுதல் நன்மைகளாக இதில் சாதாரண வாய்ஸ் கால் (Voice calls) அல்லது எஸ்எம்எஸ் (SMS) சலுகைகள் கிடையாது. டேட்டா தீர்ந்த பிறகு ஒரு எம்பி-க்கு 50 பைசா கட்டணம் வசூலிக்கப்படும்.
* அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் (Amazon Prime Video Mobile Edition), ZEE5 பிரீமியம், ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile), சோனிலிவ் (SonyLIV), ஏர்டெல் எக்ஸ்ரீம் ப்ளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) உட்பட 18-க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்களை அணுகும் வசதியும் ஏற்கனவே இதில் உள்ளது.
இந்த சலுகையை எவ்வாறு பெறுவது?
வாடிக்கையாளர்கள் இந்தச் சலுகையைப் பெறுவது மிகவும் எளிதானது.
ஏற்கனவே ஆக்டிவ் பேஸ் பிளான் (Active Base Plan) வைத்துள்ள ஏர்டெல் பயனர்கள், ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் (Airtel Thanks App) மூலம் 'Rewards & OTTs' பகுதிக்குச் சென்று இந்த யூடியூப் பிரீமியம் சலுகையை மிக எளிதாக ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.
ஒரே ரீசார்ஜில் பல ஒடிடி தளங்கள் மற்றும் எவ்வித விளம்பரமும் இன்றி யூடியூப் பிரீமியம் சேவையுடன் கூடிய இந்த புதிய திட்டமானது ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீங்கள் ஏர்டெல் வாடிக்கையாளராக இருந்தால் உடனே இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.