டேட்டா வேண்டாம் என்பவர்களுக்கு ‘Airtel’ அசத்தல் அறிவிப்பு: ரூ.185-க்கு ரீசார்ஜ்:28 நாள் வேலிடிட்டி.!

டிராய் விதித்த கெடுவிற்கு முன்பாகவே ரூ.185, ரூ.203 மற்றும் ரூ.206 ஆகிய மூன்று கட்டண திட்டங்களை ஏர்டெல் (Airtel) அறிமுகம் செய்துள்ளது.
Airtel
Airtel
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

டிராய் (TRAI) விதித்த கெடுவிற்கு முன்பாகவே ரூ.185, ரூ.203 மற்றும் ரூ.206 ஆகிய மூன்று கட்டண திட்டங்களை ஏர்டெல் (Airtel) அறிமுகம் செய்துள்ளது. இவை தற்போது ஏர்டெல் இணையதளம் மற்றும் செயலியில் நேரலையில் உள்ளன. இவற்றில் அன்லிமிடெட் கால்கள், 300 எஸ்எம்எஸ் (SMS) இலவச ஹலோடியூன்ஸ் & 28 - 30 நாள்கள் வேலிடிட்டி கிடைக்கும். இதில், டேட்டா வசதி இருக்காது. டேட்டா மற்றும் OTT சலுகைகள் தேவைப்படுவோர் ₹1,999 திட்டத்தை தேர்வு செய்யலாம்.

மொபைல் டேட்டா (இணையம்) தேவையில்லாமல், வெறும் பேசும் வசதி (Calling) மற்றும் எஸ்.எம்.எஸ் (SMS) மட்டும் தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய திட்டங்கள் சிறந்த தேர்வாக அமையும்.

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய விதிகளின் கீழ், டேட்டா இல்லாத வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் மட்டும் கொண்ட புதிய பிரீபெய்ட் (Prepaid) திட்டங்களை அறிமுகப்படுத்திய முதல் டெலிகாம் நிறுவனமாக பாரதி ஏர்டெல் அவதாரம் எடுத்துள்ளது. வரும் அக்டோபர் 21-ம்தேதிக்குள் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் சேவைகள் மட்டுமே கொண்ட ரீசாா்ஜ் திட்டங்களை, தொலைத்தொடா்பு நிறுவனங்கள் கூடுதலாக அளிக்க வேண்டும் என்று தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையமான டிராய் தெரிவித்திருந்தையடுத்து இந்த மாற்றத்தை ஏர்டெல் நிறுவனம் செய்துள்ளது.

அதன்படி, ஏர்டெல் அறிமுகம் (ஏர்டெல் பிளான்) செய்துள்ள ரூ.185, ரூ.203 மற்றும் ரூ.206 ஆகிய மூன்று கட்டணத் திட்டங்கள், இன்டர்நெட் தேவையில்லாமல் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை மட்டும் அதிகமாகப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மூன்று திட்டங்கள் மூலமும் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற அன்லிமிடெட் அழைப்புகள் (Local, STD, Roaming) மற்றும் 300 எஸ்.எம்.எஸ் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

இந்த திட்டங்களின் முக்கிய விவரங்கள் இதோ:

Airtel|ஏர்டெல் பிளான்
Airtel|ஏர்டெல் பிளான்

குறைந்த கட்டண திட்டங்கள்: ரூ.185, ரூ.203 மற்றும் ரூ.206.

காலாவதி காலம் (Validity): 28 முதல் 30 நாட்கள் வரை.

குறிப்பு: இந்த மூன்று திட்டங்களிலும் டேட்டா (Data) வசதி இருக்காது.

ரூ.185 திட்டம்: மிகவும் மலிவான இந்த திட்டத்தின் சேவைக்காலம் 28 நாட்கள் ஆகும்.

ரூ.203 திட்டம்: ரூ.185 திட்டத்தில் உள்ள அதே அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் 300 எஸ்எம்எஸ் சலுகைகளுடன் 30 நாட்கள் செல்லுபடியாகும்.

ரூ.206 திட்டம்: இது காலண்டர் மாத செல்லுபடியாகும் திட்டமாகும் (எடுத்துக்காட்டாக, பிப்ரவரி மாதத்திற்கு 28 நாட்கள், மார்ச் மாதத்திற்கு 31 நாட்கள் என அந்தந்த மாதங்களின் நாட்களுக்கு ஏற்ப மாறும்).

இந்த மூன்று திட்டங்களிலுமே கூடுதல் கட்டணமின்றி இலவசமாக 'ஹலோடியூன்ஸ்' அமைத்துக் கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு செக்! BSNL - வோடபோன் அதிரடி கூட்டணி..!
Airtel

முக்கிய பலன்கள்: வரம்பற்ற அழைப்புகள் (Unlimited Calls), 300 SMS மற்றும் இலவச ஹலோடியூன்ஸ் (Hellotunes).

டேட்டா மற்றும் OTT சலுகை: இணைய வசதி மற்றும் OTT சலுகைகள் தேவைப்படுபவர்கள் ₹1,999 திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

இந்த திட்டங்கள் ஏற்கனவே ஏர்டெல் செயலி (Airtel Thanks App) மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கின்றன.

ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத ஏழை மற்றும் கிராமப்புற நுகர்வோரின் நலனைக் காக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
4ஜி நெட்டிலும் அன்லிமிடெட் அள்ளித்தரும் VI… ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு ஆப்பு!
Airtel

சாதாரண பட்டன் போன் வைத்திருப்பவர்கள் மற்றும் டேட்டாவைப் பயன்படுத்தாத வாடிக்கையாளர்கள், தங்களுக்குத் தேவையில்லாத மொபைல் டேட்டாவிற்கும் சேர்த்து பணம் செலுத்துவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.