
டைம் டிராவலர் என்று தன்னைத்தானே அறிவித்துக் கொண்ட எல்விஸ் தாம்சன் (Elvis Thompson) என்ற நபர், இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ தற்போது வைரலாகி மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்த்தது மட்டுமின்றி சமூக வளைதளத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அப்படி அவரு என்ன சொன்னாருன்னு கேக்குறீங்களா. இந்த வருஷம் 5 பெரிய சம்பவங்கள் நடக்க போறதா சொல்லி இருக்காரு. அதுவும் நமக்கு இல்லீங்க. அமெரிக்காவில் தான். அப்படி என்னதான் சொல்லி இருக்காருன்னு பாருங்க.
எல்விஸ் தாம்சன் டைம் டிராவலில் எதிர்காலத்தை நோக்கி பயணித்ததாகவும் அப்படி பயணிக்கும் போது அவருக்கு எதிர்காலத்தில் நடக்கக்கூடிய 5 பேரழிவுகள் தெரிந்ததாகவும் கூறி உள்ளார். அவரது டைம் டிராவல் கணிப்புகளின் படி, ஓக்லஹோமாவில் பேரழிவு தரும் சூறாவளி, அமெரிக்க உள்நாட்டுப் போர், ஒரு பெரிய கடல் உயிரினத்தின் கண்டுபிடிப்பு, சாம்பியன் என்ற ஏலியன்களின் வருகை மற்றும் அமெரிக்காவில் ஒரு பெரிய புயல் என்ற சம்பவங்கள் நடக்க போறதா சொல்லி இருக்காரு. அதுமட்டும் இல்ல... எந்த நாளில் நடக்கும் என்பதையும் சொல்லி இருக்காரு.
எதிர்காலத்தை நோக்கி டைம் டிராவலில் பயணித்ததாக எல்விஸ் தாம்சன் சொல்றது உண்மையா, பொய்யானு தெரியல. ஏன்னா நிகழ்காலத்தில் இருந்து எதிர்காலத்திற்கு அல்லது கடந்த காலத்திற்கு போறது தான் டைம் டிராவல். டைம் டிராவல் உண்மையானு பல நூற்றாண்டுகளாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செஞ்சிட்டு இருக்காங்க. ஆனா இன்று வரைக்கும் இதற்கு முடிவு தெரியவில்லை என்பது தான் நிஜம். பல திரைப்படங்களில், கதைகளில் டைம் டிராவல் பற்றி பார்த்து இருப்போம். ஆனால் அது நடைமுறைக்கு எந்த அளவுக்கு சாத்தியம் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
சரி இப்போ விஷயத்துக்கு வரலாம். எந்த நாட்களில் இந்த 5 சம்பவங்கள் நடக்க போகுதுனு தாம்சன் சொல்லி இருக்காருனு பாருங்க.
செப்டம்பர் 1-ம் தேதி, சாம்பியன் என்ற ஏலியன்கள் பூமிக்கு வரும் என்றும், அவர்கள் 12,000 மனிதர்களை அவர்களின் பாதுகாப்பிற்காக மற்றொரு கிரகத்திற்கு கூட்டிகிட்டு போவாங்கனும் தாம்சன் கணித்துள்ளார். அதுமட்டுமின்றி பூமிக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் இருக்கும் விரோதமான ஏலியன்கள் குறித்தும் அவர் எச்சரித்தார். ஆனா நம்ம விஞ்ஞானிகள் தான் ரொம்ப பாவம், ஏன்னா பல காலமா ஏலியன் இருக்கா, இல்லையானு தெரியாம மண்டை போட்டு உடைச்சிகிட்டு இருக்காங்க.
ஏப்ரல் 6-ம்தேதி மணிக்கு 1,046 கிமீ வேகத்தில் 24 கிமீ அகலத்தில் வீசும் சூறாவளி காற்று அமெரிக்காவில் அதிக பேரழிவை ஏற்படுத்தும் என்றும், ஓக்லஹோமாவை அழிக்கும் என்றும் கணித்துள்ளார்.
மே 27-ம்தேதி, அமெரிக்காவில் 2-வது உள்நாட்டுப் போர் வெடிக்கும் என்று அவர் கணித்துள்ளார். இதன் விளைவாக டெக்சாஸில் பிரிவினை ஏற்படும் என்றும், அதே சமயம் உலகளாவிய மோதலைத் தூண்டி, இறுதியில் அமெரிக்காவின் அழிவுக்கு காரணமாக அமையும் என்றும் அவர் கணித்துள்ளார்.
செப்டம்பர் 19-ம்தேதி அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் ஒரு பெரிய புயல் தாக்கும் என்று தாம்சன் கணித்துள்ளார்.
கடைசியாக, நவம்பர் 3-ம்தேதி பசிபிக் பெருங்கடலில் நீல திமிங்கலத்தை விட ஆறு மடங்கு மிகப்பெரிய மற்றும் செரீன் கிரவுன் என்றழைக்கப்படும் கடல் உயிரினம் கண்டுபிடிக்கப்படும் என்று கணித்துள்ளார்.
இந்த சம்பவங்கள் அனைத்தும் அமெரிக்காவில் நடக்கும் என்று தாம்சன் பேசும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்ட சில மணி நேரத்தில் 26 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. பயனர்கள் பலர் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை பரிமாறினர். சிலர் இது உண்மையாக இருக்காமா? என்று கேள்வி எழுப்பிய நிலையில், மற்றும் சிலர் டைம் டிராவல் என்பது புதுசா இருக்கு என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
பிரபலமான பாபா வங்கா, நாஸ்ட்ரடாமஸ் போன்ற தீர்க்கதரிசிகளின் கணிப்புகள் இதுவரை சரியாகவே இருந்துள்ளது. அந்த வகையில் எல்விஸ் தாம்சன் கணிப்பு நடக்குமா, நடக்காதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.