

அவசர உதவி தேவைப்படும் அவசர நிலை (Emergency)களான க்ரைம் குற்றங்கள், பெண்களுக்கான உடனடி பாதுகாப்பு , ஆம்புலன்ஸ்(Ambulance), காவல்துறை(Police Assistance),தீயணைப்புத் துறை (Fire Service) என அனைத்து சேவைகளையும் ஒரே செயலியில், ஒரே ஒரு போன்கால் மூலம் தொடர்பு கொள்ள உதவும் அவசர உதவி மொபைல் செயலிதான் 112 இந்திய அரசின் ஆப் (112 India App).சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் இந்திய அரசின் '112 India' செயலி மூலம் இவை அனைத்தையும் ஒரே இடத்தில் பெற முடியும்.
இந்த ஆப் சில வருடங்கள் முன் தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் (NCRB)(National Crime Records Bureau)உருவாக்கி அரசு அனுமதியுடன் உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs ) கீழ் செயல்படுகிறது .அமெரிக்காவில் இது போன்ற அனைத்து எமர்ஜென்சி சேவைகளுக்கும் 911 எனும் எண் இருப்பது போல இந்தியா முழுவதும் ஒரே அவசர உதவி எண்ணாக 112-ஐக் கொண்டு வருவதே இதன் முக்கிய நோக்கம்.
இணைக்கப்பட்ட எண்கள்:
ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த கீழ்க்கண்ட எண்கள் இப்போது 112-உடன் இணைக்கப்பட்டுள்ளன:
100 – காவல்துறை (Police)
101 – தீயணைப்புத் துறை (Fire)
102 / 108 – ஆம்புலன்ஸ் (Ambulance)
1091 – பெண்கள் உதவி எண் (Women helpline)
112 App-ல் இருக்கும் Emergency Button மூலம் நாம் அழுத்தும் ஒரு touch-ல் அவசர உதவியைப் பெறலாம். GPS மூலம் location கண்டறிதல் என பல்வேறு முக்கிய வசதிகள் கொண்டுள்ளது.குறிப்பாக Location Tracking மூலம் நீங்கள் இருக்கும் இடத்தை போலீஸ் பார்க்கலாம்,மேலும் உங்கள் குடும்பத்தாருக்கு (Trusted Contacts alert) எச்சரிக்கை தரலாம்.(SHOUT feature) ஆக phone shake செய்தால் SOS மெசேஜ் என நமது பாதுகாப்புக்கு மிகவும் உதவுகிறது இந்த ஆப்.
5 முக்கிய நன்மைகள்:
அவசர நேரத்தில் அதிவேக உதவி.
பெண்களுக்கு மிகச்சிறந்த பாதுகாப்பு கவசம்.
தானியங்கி இருப்பிடப் பகிர்வு (Location Auto-share).
பீதி அடைந்த நிலையில் உதவும் 'Panic Alert' வசதி.
இது முற்றிலும் இலவசமான சேவை.
பொதுவாக அவசர எண்ணை அழைத்த 10 முதல் 12 நிமிடங்களில்(response time) உதவி தேடி வரும். . சில முக்கிய நகரங்களில் 8 முதல் 10 நிமிடங்களுக்குள்ளேயே சேவை கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்த செயலியின் உதவிகளைப் பெற ப்ளே ஸ்டோரில் (play Store-ல்) 112 India வை பதிவிறக்கம் (download) செய்து செல்போன் எண்ணை ரிஜிஸ்டர் (Mobile number register) செய்யவும்.மொபைலுக்கு வரும் OTP-யை சரிபார்த்து உங்கள் விபரங்களை பூர்த்தி (Profile details fill)செய்து அவசரக் காலத் தொடர்புகளை (Emergency Contacts) இணைத்து சேமிக்கவும்.
பெண்கள், மாணவர்கள் , முதியவர்கள், இரவு வேலை செய்பவர்கள்தனியாக பயணம் செய்பவர்கள் ஆகியோருக்கு பெருமளவு உதவியாக இருக்கும் இந்த ஆப்பை இது வரை பதிவிறக்கம் செய்யவில்லை என்றால் உடனடியாக செய்து கொள்ளுங்கள்.
நடு இரவு எனினும் அச்சமின்றி அவசர நிலை உதவிக்கு அழைக்கலாம் இனி 112 Indiaவை.