#BIG NEWS : இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பொதுத்துறை வங்கிகள் செயல்படும்..? உண்மை நிலவரம் இதோ..!

வங்கிகள் வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே செயல்படும் - மத்திய அரசு அறிவிப்பு? உண்மை என்ன?
bank
bank
Updated on: 

வங்கி வாரத்தில் இனி 5 நாள் மட்டுமே செயல்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாக செய்தி பரவுகிறது. அது உண்மையா?

வாரத்தில் 5 நாட்களுக்கு வேலைத்திட்டத்தை அமல்படுத்துவது, அனைத்து ஊழியர்களுக்கும் விகிதாச்சார அடிப்படையில் பிஎல்ஐ (லாபத்தின் அடிப்படையில் இணைப்பு ஊக்கத்தொகை) சமமாக வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் சங்கங்களின் ஐக்கிய மன்றமும், இக்கோரிக்கைகளுடன் ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிடுவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கமும் நாடு தழுவிய அளவில் செப்.28 முதல் 30-ம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருந்தனர்.

இந்நிலையில், வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு, ஐபிஏ உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. எனவே மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், வங்கி ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், வாரத்துக்கு 5 நாட்களுக்கு மட்டும் வங்கிகள் இயங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உத்தரவால் வங்கி ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொதுத்துறை வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமைகளும் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, SBI, UBI, PNB மற்றும் பிற அரசுக்கு சொந்தமான வங்கிகள் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் இனி ஒவ்வொரு சனிக்கிழமையும் பொது விடுமுறை நாளாகும்.

govt gazette
govt gazette
bank leave
bank leave source:polimer

இந்நிலையில், வங்கி ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் வாரத்துக்கு 5 நாட்களுக்கு மட்டும் வங்கிகள் இயங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் பரவுகின்றன.ஆனால் அப்படிப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் அரசு இன்னும் வெளியிடவில்லை.

ஆகையால் அதிகாரபூர்வ செய்திகள் வரும் வரம் யாரும் இதை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது

இதையும் படியுங்கள்:
சம்பள பாக்கி கேட்டு ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய அஜித் குமார்: நடந்தது என்ன?
bank
logo
Kalki Online
kalkionline.com