ராமதாஸுக்கு நோ சொன்ன இபிஎஸ்.! அரசியல் அரங்கில் பரபரப்பு.!

EPS denied ramadoss
Ramadoss PMK
Updated on

தமிழ்நாட்டில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், கூட்டணி விவகாரம் மற்றும் தொகுதி பங்கீட்டை உறுதி செய்வதில் முன்னணி கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது வரை ஓபிஎஸ், தேமுதிக மற்றும் ராமதாஸ் தரப்பு பாமக ஆகியோர் எந்தக் கூட்டணியிலும் இணையவில்லை.

ராமதாஸ் தரப்பு பாமக, திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் இணைய பேச்சு வார்த்தைகளை நடத்தியது. இருப்பினும் திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான உட்கட்சி பூசல் காரணமாக இன்னும் திமுகவில் இணைவது உறுதி செய்யப்படவில்லை.

அதேபோல் ராமதாஸை அதிமுக கூட்டணியில் இணைக்க இபிஎஸ் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மகா சிவராத்திரி அன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஈஷாவில் சந்தித்துள்ளார். இதன் காரணமாக தேமுதிக அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக செய்திகள் பரவின. இருப்பினும் பிரேமலதா விஜயகாந்த் இன்னும் கூட்டணி முடிவை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ராமதாஸ் தரப்பைச் சேர்ந்த எம்எல்ஏ அருள், சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இதன் காரணமாக ராமதாஸ் தரப்பு பாமகவும் அதிமுகவில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்ததாக கருத்துக்கள் பரவின.

இருப்பினும் ஏற்கனவே அதிமுக கூட்டணியில் அன்புமணி இருப்பதால், ராமதாஸை கூட்டணியில் சேர்த்தால் அது பிரச்சினையை ஏற்படுத்தி விடும் என அதிமுக கருதுகிறது. சமீபத்தில் எம்எல்ஏ அருள் இபிஎஸ்-ஐ சந்தித்து பேசும்போது கூட, கூட்டணி குறித்து பேச இபிஎஸ் மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராமதாஸ் தரப்பு பாமகவை அதிமுக கூட்டணியில் சேர்த்தால், அன்புமணியை சமாதானப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். மேலும் தொகுதிப் பங்கீட்டிலும் குழப்பம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்பதால், ராமதாஸை கூட்டணியில் இணைக்க இபிஎஸ் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன

இதையும் படியுங்கள்:
கறவை மாடு வாங்க ரூ.1.20 லட்சம் கடனுதவி.! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.?
EPS denied ramadoss

பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் காரணமாக ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் தனிப் தனி பாதையில் சட்டமன்ற தேர்தலலை சந்திக்க இருக்கின்றனர். இருப்பினும் பாமக-வின் தேர்தல் சின்னமான ‘மாம்பழம்’ அன்புமணி தரப்புக்கே கிடைக்க அதிக வாய்ப்புள்ளதால், அன்புமணிக்கே அதிமுக அதிக ஆதரவு கொடுப்பதாக கருதப்படுகிறது.

வேறு கட்சியில் கூட்டணி சேர்ந்தால் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட முடியாது என்பதால், அதிமுகவில் இணைய ராமதாஸ் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இதற்கு இபிஎஸ் மறுப்பு தெரிவித்திருப்பது, ராமதாஸுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது

இதையும் படியுங்கள்:
இனி எழும்பூரில் ரயில்கள் இங்கு தான் நிற்கும்.! மின்சார ரயில் சேவையில் பெரிய மாற்றம்.!
EPS denied ramadoss
logo
Kalki Online
kalkionline.com