#BIG NEWS : இனி அரிசி 30 ரூபாய்க்கும் துவரம் பருப்பு 130 ரூபாய்க்கு விற்கப்படும்..!

அமுதம் அங்காடிகளில் கிலோ ₹30-க்கு சன்னரக அரிசி! மக்களுக்கு நிவாரணம் அளித்த அரசு!
அரிசி விலை
அரிசி விலை

மணிகண்டன், எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில் பயனுள்ள தகவல்களையும் புதிய சிந்தனைகளையும் கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்கி வருகிறார்.

Updated on: 

தமிழ்நாட்டில் இன்று முதல் சன்னரக அரிசி ரூ.30க்கு அமுதம் அங்காடி மூலம் விற்கப்படும் என்ன அமைச்சர் வெங்கடராமன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் : கர்நாடகா, ஆந்திராவில் இருந்து பொன்னி அரிசியின் வரத்து குறைந்ததால் தமிழகத்தில் அரிசி விலை உயர்ந்திருக்கிறது. இதைக் கட்டுப்படுத்தவும் பொதுமக்களுக்கு உதவிடவும் இன்று முதல் தமிழ்நாட்டில் விளையும் உயர்தர சன்னரக அரிசி கிலோ ரூ.30-க்கு அமுதம் அங்காடி மூலம் விற்பனை செய்யப்படும்.

மேலும் அவர் பேசியதாவது, 2023 ல் 52 ரூபாயாக இருந்த ஒரு கிலோ அரிசி, 2024ம் ஆண்டில் 60 ரூபாய் ஆனது. 2025ம் ஆண்டில் 65 ரூபாய் ஆக உயர்ந்தது. 2022 ல் 110 ஆக இருந்த துவரம் பருப்பு விலை 2024ல் 171 ஆக உயர்ந்தது என குறிப்பிட்ட அவர் அமுதம் அங்காடிகளில் குறைந்த விலைக்கு உணவுப்பொருட்கள் விற்பனை செய்து வருகிறோம் . துவரம் பருப்பு கிலோ 130 ரூபாய்க்கு வழங்குகிறோம்.

சன்ன ரக அரிசியை தான் மக்கள் அதிகாக பயன்படுத்துகின்றனர். 25 ஆயிரம் மெட்ரிக் டன் சன்னரக அரிசி 250 அமுதம் அங்காடிகள் வாயிலாக விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளோம்.அமுதம் அங்காடிகளில் நேரடியாக வாங்கி கொள்ளலாம். கிலோ 30 ரூபாய்க்கு பெற்று கொள்ளலாம்.சில குறிப்பட்ட கட்சிகளை சேர்ந்த வியாபாரிகள், உணவுப்பொருட்களை பதுக்குகின்றனர். இதனால் விலைவாசி உயர்ந்துள்ளது. உணவுப்பொருட்களை பதுக்கலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இதையும் படியுங்கள்:
உருளைக்கிழங்கை தவிர எல்லாமே ஏறிடுச்சு..! 41 அத்தியாவசியப் பொருட்களின் விலை கடும் உயர்வு...!
அரிசி விலை