
ஏதேனும் சாதனை அல்லது ஏதேனும் குறிப்பிட்ட சம்பவத்திற்குப் பிறகு அமுல் தனது கார்ட்டூன் பதிவு வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற குகேஷ்க்கு அமுல் கார்ட்டூன் படத்தை வெளியிட்டுள்ளது.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ் பட்டம் வென்றிருக்கிறார். இதன்மூலம் இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்து தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார். அதேபோல், உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ள 2-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் குகேஷ் பெற்றுள்ளார்.
அமுல் பிராண்ட் மீண்டும் மற்றொரு வினோதமான தலைப்புடன் வெளிவந்துள்ளது. இந்த முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷைக் கொண்டாடி இருக்கிறது. உலக செஸ் சாம்பியன் போட்டியில் குகேஷ் 14வது மற்றும் கடைசி ஆட்டத்தில் சீனாவின் டிங் லிரனை தோற்கடித்து வரலாறு படைத்தார்.
சென்னையைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் குகேஷ் முன்னதாக Candidates Tournamentல் ஆதிக்கம் செலுத்தி, 2024 செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவை தங்கப் பதக்கத்திற்கு அழைத்துச் சென்றார். சாம்பியன்ஷிப் போட்டியில், குகேஷ், டிங் லிரனின் ஒரு முக்கியமான தவறை செய்ய வைத்து, 58 நகர்வுகளில் சாதூர்யமாக ஆட்டத்தை முடித்தார். இதை கொண்டாடும் விதமாக கிளாசிக் அமுல் பாணியில் வெளியிட்ட வாழ்த்து, பிரமாண்டத்திற்கான நகைச்சுவையாகவும் மனதைக் கவரும் விதமாகவும் உள்ளது.
அமுல் வெளியிட்ட கார்ட்டூர் படத்தில், குகேஷை கொண்டாட்டத்தில் கைகளை உயர்த்திய படியும் அதில் ஒரு கையில் அமுல் வெண்ணெயுடன் ரொட்டித் துண்டைப் பிடித்திருப்பதை போலவும், மற்றொரு கையில் வெண்ணெய் தடவிய விரல்களை வெற்றியின் கொண்டாட்டத்தை காட்டும் ''V'' வடிவில் காட்டுவதை போலவும் உள்ளது. மேலும் அவருக்கு முன்னால் ஒரு சதுரங்கப் பலகை வைக்கப்பட்டுள்ளது. அந்த போஸ்டரின் மேலே,“Loved across the board” கீழே “Amul India's Grandmaska, என்றும் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. "அமுல் தலைப்பு: டி குகேஷ் 18 வயதில் உலக செஸ் சாம்பியன் ஆனார்!" இங்கே பாருங்கள் என்று வாசகத்தை தலைப்பாக பதித்துள்ளது.
அமுல் வெளியிட்ட இந்த புகைப்படத்துடன் கூடிய தலைப்பு இணையதளத்தில் வேகமாக பரவி வைரல் ஆனது. இதற்கு பல்வேறு தரப்பிரனரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இடுகையின் கீழ் ஒரு பயனர் கருத்துத் தெரிவிக்கையில், “எந்தவொரு சாதனை அல்லது ஏதேனும் குறிப்பிட்ட சம்பவத்திற்குப் பிறகு நாங்கள் எப்போதும் விளம்பரப் பலகைக்காகக் காத்திருப்போம். அமுல் ஒருபோதும் ஏமாற்றமடைய வைக்காது. Maska Chess-ka!” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொருவர் "Loved it to the core" என்று எழுதியுள்ளார்.
"அனைத்து எதிர்காலத் திட்டங்களின் வீரருக்கும் நல்வாழ்த்துக்கள்" என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.