அமெரிக்க சட்டத்தை மீறி chatgpt ஐ உருவாக்கியுள்ளனர் என்ற செய்தியை வெளிப்படையாக சொன்ன chatgptயின் முன்னாள் ஊழியர் கடந்த மாதம் உயிரிழந்தார். இதனையடுத்து இது கொலையா தற்கொலையா என்பதற்கான விடை தெரியவந்துள்ளது.
AI தொழில்நுட்பத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒன்றுதான் Chatgpt. இப்போது அனைவரும் பயன்படுத்தும் ஒன்றாக இருந்து வருகிறது. நம்முடைய அத்தனை சந்தேகங்களையும் தீர்த்து வரும் தொழில்நுட்பமாக இருந்து வருகிறது. இதில் அவ்வப்போது புது புது அம்சங்கள் கொண்டுவரப்பட்டு வருகின்றன. புது புது வசதிகள் கொண்டு வந்து பயனாளர்களை அதிகம் வைத்திருக்கும் ஒன்றாக இது உள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு முதல் 4 வருடங்கள் Chatgpt நிறுவனத்தில் பணியாற்றினார். பணியாற்றிய காலத்தில் இறுதி ஒன்றரை வருடங்கள் ChatGPT தரவுகள் பகுப்பாய்வில் மிக முக்கிய பங்காற்றினார்.
இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் திடுக்கிடும் தகவல் ஒன்றைப் பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்திருந்தார். “ChatGPT உருவாக்குகையில் Open AI நிறுவனம் பல்வேறு அமெரிக்க தொழில்நுட்ப பதிப்புரிமை சட்டத்தை மீறியுள்ளது. முதலில் பதிப்புரிமை பற்றி எனக்குப் போதிய அறிவு இல்லை. அதன் பிறகு GenAI நிறுவனத்திற்கு எதிராக பதிப்புரிமை பற்றிய பிரச்சனைகள் நீதிமன்றத்திற்கு வந்த பிறகு தான் தெரியவந்தது .” என்று அவர் தெரிவித்திருந்தார்.
அந்தவகையில் OpenAI -ன் ChatGPTயை உருவாக்கியதில் தொழில்நுட்ப வல்லுனராக பணியாற்றிய சுசிர் பாலாஜி என்பவர் கடந்த நவம்பர் 26ஆம் தேதி அமெரிக்கா, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்துக் கிடந்தார்.
இது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து Chatgpt யின் பயன்பாடு கனிசமாக குறைந்தது. அந்நிறுவனத்தில் பணியாற்றிய தலைமை தொழில்நுட்ப அதிகாரி மீரா முராட்டி, தலைமை ஆராய்ச்சி அதிகாரி பாப் மெக்ரூ மற்றும் ஆராய்ச்சியின் துணைத் தலைவர் பாரெட் சோஃப் உட்பட உயர்மட்ட நிர்வாகிகள் அனைவரும் நிறுவனத்தில் இருந்து விலகியுள்ளனர்.
இதற்கிடையே உண்மைகளை உடைத்த பாலாஜி கடந்த நவம்பர் 26ம் தேதி அமெரிக்கா, சான் பிரான்சிஸ் கோவில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது கொலையா தற்கொலையா என்ற சந்தேகம் வெகுநாட்களாக நீடித்து வந்தது. இதனையடுத்து தற்போது அவர் தற்கொலைதான் செய்திருக்கிறார் என்று மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். போலீஸாரின் விசாரணை அறிக்கையிலும் அதேதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது.