10,000 ஏரிகள் காலி: வறட்சி மாநிலமாகிறதா தமிழ்நாடு? அவசர கோரிக்கை விடுத்த அன்புமணி.!

மேட்டூர் அணை நீர் பற்றாக்குறை மற்றும் கருகும் குறுவை பயிர்களைக் காக்க அரசுக்கு பாமக அவசரக் கோரிக்கை.
வறட்சி மாநிலம்
Anbumani
Updated on

பருவகால மாற்றத்தால் தமிழ்நாட்டில் பருவ மழை பொய்த்துள்ளது. அதோடு சூப்பர் நோ விளைவால் உலகம் முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஏரிகளும், நீர்நிலைகளும் வறண்டு போயுள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம் ஆனால் இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக நீர்மட்டம் குறைவாக இருப்பதை காரணம் காட்டி தமிழக அரசு மேட்டூர் அணையை திறக்கவில்லை. இதனால் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் குறுவை சாகுபடி கிட்டத்தட்ட 2 லட்சம் ஏக்கர்கள் குறைந்தன.

அதோடு கர்நாடகத்திலிருந்து வரவேண்டிய தண்ணீரும் வராததால், டெல்டா மாவட்ட விவசாயிகள் கடுமையான பாதிப்பை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். நீர் நிலைகளும் வறண்டு போனதால் தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என இன்று பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
PM Kisan நிதி உதவி: விவசாயிகளுக்கு ரூ.6,000 கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
வறட்சி மாநிலம்

அன்புமணி ராமதாஸ் கூறுகையில், “டெல்டா மாவட்டங்களில் உள்ள 95% நீர்நிலைகள் வறண்டுள்ளன. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 10,000 ஏரிகளில் தண்ணீரே இல்லை. பருவமழை பொய்த்ததாலும், கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படாததாலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் இதனை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்” என அன்புமணி தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டு, தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது பாட்டாளி மக்கள் கட்சி. இக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த மாதம் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, கட்சியின் முழு பொறுப்பும் அவருடைய மகனான அன்புமணி வசம் வந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசியல் சூழல், போதைப் பொருள் தடுப்பு மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அன்புமணி ராமதாஸ், தற்போது விடுத்துள்ள கோரிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது.

பருவமழை பொய்த்ததன் விளைவால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவித்து, மத்திய அரசிடம் இருந்து நிதியைப் பெற்றால், அந்தத் தொகையை விவசாயிகளுக்காக பயன்படுத்த முடியும்.

வறட்சி மாநிலம்
Anbumani
இதையும் படியுங்கள்:
பெரிய ஆபத்து காத்திருக்கு..நெருப்பாய் மாறப் போகும் பசிபிக் பெருங்கடல்: எச்சரிக்கை விடும் ஐநா..!!
வறட்சி மாநிலம்

எம்எல்ஏ-க்களுக்கு கார் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியான போது, பாமக எம்எல்ஏ-க்களுக்கு கார் வேண்டாம்; அதற்குப் பதிலாக எங்கள் தொகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களைக் கட்டித் தாருங்கள். விவசாயிகளுக்கு பயன்படட்டும் என பாமக கொறடா சௌமியா அன்புமணி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

காவிரியில் இருந்து தண்ணீரை திறந்து விட வேண்டுமென உச்சநீதிமன்றமே ஆணையிட்ட போதிலும், கர்நாடக அரசு தண்ணீரை திறந்து விட மறுக்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு தண்ணீரை திறந்து விடுவதில் கர்நாடகாவிற்கு என்ன தான் பிரச்சினை என்ற கேள்வியை இன்று எழுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம்.

மேலும் விகிதாச்சாரம் அடிப்படையில் நீர் திறப்பது குறித்து, காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிட தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி பிரச்சினை வரும் போதொல்லாம் தமிழக விவசாயிகளுக்கு சோதனை காலம் தான். ஆனால் இம்முறை பருவமழையும் கைவிட்டதால், எண்ணற்ற விவசாயிகள் என்ன செய்வதென்றே தெரியாமல் இருக்கின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com