பெரிய ஆபத்து காத்திருக்கு..நெருப்பாய் மாறப் போகும் பசிபிக் பெருங்கடல்: எச்சரிக்கை விடும் ஐநா..!!

Super El Nino
Heat Waves
Updated on

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளைக் காட்டிலும் நடப்பாண்டில் கடுமையான வெயில் வீசி வருகிறது. கடுமையான வெயிலை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். இந்நிலையில் பல தசாப்தங்களில் இல்லாத அளவு நடப்பாண்டில் சக்தி வாய்ந்த சூப்பர் எல்-நினோ நிகழ்வு ஏறபட வாய்ப்புள்ளது என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சூப்பர் எல்-நினோ நிகழ்வால் தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் கடுமையான வறட்சி மற்றும் காட்டுத் தீ ஏற்படக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாதாரண எல்-நினோ நிகழ்விற்கே கடலின் வெப்பநிலை 0.5°C வரை உயரக்கூடும். சூப்பர் எல்-நினோ நிகழ்வு ஏற்பட்டால் கடலின் வெப்பநிலை 2°C வரை உயரக்கூடும். இது ஒட்டுமொத்த வானியல் உலகையே தலைகீழாக மாற்றி விடும். இதன் காரணமாக பல நாடுகளில் கடுமையான வளர்ச்சி ஏற்படுவதோடு, காட்டுத் தீயும் பரவும்.

பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பூமத்திய ரேகைப் பகுதிகளில், கடலின் மேற்பரப்பு வெப்பநிலை சாதாரண அளவைக் காட்டிலும் 2°C அல்லது அதற்கும் அதிகமாக உயர்வதை 'சூப்பர் எல்-நினோ’ என்று அழைப்போம்.

ஏற்கனவே பருவகால மாற்றத்தால், கோடை காலம் அதிக நாட்கள் நீடிக்கும் நிலையில் மழைப்பொழிவு குறைந்து வருகிறது. இந்நிலையில் ஐநா கூறியது போல் சூப்பர் எல்-நினோ நிகழ்வு மட்டும் நடப்பாண்டில் நிகழ்ந்தால், அது ஒட்டுமொத்த உலகையே பாதிக்கக் கூடியதாக அமைந்து விடும்.

பருவகால மாற்றத்தால் ஆண்டுதோறும் வெப்பநிலை அதிகரித்து வரும் சூழலில் நடப்பாண்டும் (2026), அதற்கு அடுத்த ஆண்டும் (2027) உலகின் வெப்பமான ஆண்டுகளாக பதிவாக வாய்ப்புள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சூப்பர் எல்-நினோவால் கடுமையான வறட்சி ஏற்படும் என ஐநா எச்சரிக்கை விடுத்த நிலையில், தனியார் வானிலை நிறுவனத்தின் இந்த அறிவிப்பு உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர 2027-ல் உலகின் சராசரி வெப்பநிலை 1.8°C-க்கும் அதிகமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
#JUST IN: ஒரே நாளில் ரூ.5,000 சரிவு.! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.!
Super El Nino

நேற்று (ஜூன் 3) காலை சூரியனில் சக்தி வாய்ந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அரிய நிகழ்வை நாசாவின் SDO விண்கலம் மிகத் துல்லியமாக படம் பிடித்துள்ளது. ஏற்கனவே வெப்பநிலை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், சூரியனில் வெடிப்பு ஏற்பட்டு இருப்பது அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே அமைந்துள்ளது. மேலும் இது ஆபத்தான வெடிப்பு என்றும் நாசா தெரிவித்துள்ளது.

இந்த வெடிப்பு காரணமாக பூமியில் தகவல் தொடர்பு பரிமாற்றங்கள் தடைப்படுவதோடு, ஜிபிஎஸ் மற்றும் சிக்னல் கோளாறுகளையும் ஏற்படுத்தும் என நாசா தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் கோடை காலம் இன்னும் சில தினங்களில் முடியவுள்ள நிலையிலும், வெப்பநிலை அதிகரித்தே காணப்படுகிறது.

இந்நிலையில் அடுத்த ஆண்டில் நடப்பாண்ட வீடு அதிகளவு வெப்பநிலை பதிவாகும் என்பதால், இப்போதே பொதுமக்கள் அதற்குத் தயாராக இருக்க வேண்டியது அவசியம்.

இதையும் படியுங்கள்:
இளநீர் குடிக்கணும்னா இனி யோசிக்கனும் போல.. கிடுகிடுவென உயர்ந்த விலை..!!
Super El Nino
logo
Kalki Online
kalkionline.com