

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் முடிவடைய இருப்பதால் அரசியல் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய கூட்டணியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வரும் அண்ணாமலை இன்று கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் கோவையின் 10 தொகுதிகளிலும் என்டிஏ கூட்டணி அமோக வெற்றி பெறும் எனத் தெரிவித்தனர்.
அதன்பிறகு இருசக்கர வாகனத்தில் பரப்புரையைத் தொடங்கினார் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
இருசக்கர வாகனப் பரப்புரையில், வானதி சீனிவாசனை ஏற்றிக் கொண்டு அண்ணாமலை பைக் ஓட்டிய காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கோவை வடக்கு தொகுதியின் ஒவ்வொரு வீதியிலும் அண்ணாமலை தற்போது பைக் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
இம்முறை பாஜக-வின் ஓட்டு சதவிகிதத்தை உயர்ததவும், என்டிஏ கூட்டணி ஆட்சியைப் பிடிக்கவும் அண்ணாமலை தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடியவுள்ளதால், அனைததுக் கட்சி வேட்பாளர்களும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.