விஜய் அரசுக்கு ஓராண்டு டைம் கொடுங்க: அண்ணாமலையின் பேச்சால் சூடான தமிழக அரசியல்..!!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு மக்கள் ஓராண்டு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.
அண்ணாமலை
annamalai
Updated on

அமெரிக்காவில் நடைபெற்ற 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை, தமிழகத்தில் புதிதாக அமையும் அரசு தங்களை முழுமையாக நிலைநிறுத்தி கொள்ள குறைந்தபட்சம் ஓராண்டு காலமாவது தேவைப்படும் என்று கூறியுள்ளார். எனவே, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு மக்கள் ஓராண்டு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். தவெக அரசுக்கு அண்ணாமலை திடீரென ஆதரவாக பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி தொடங்கியுள்ள ஒரு புதிய அரசியல் இயக்கம் தான் ‘வி த லீடர்ஸ்’ (We The Leaders).

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலைகள் மற்றும் உத்திகள் தொடர்பாக பாஜகவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், கடந்த ஜூன் 2-ம்தேதி அவர் தனது தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். குறிப்பாக ராஜினாமா முடிவை அறிவிப்பதற்கு முன், டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசியத் தலைவர் நிதின் நபின் மற்றும் மூத்த தலைவர் பி.எல். சந்தோஷ் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.

பாஜகவில் இருந்து விலகிய பின்னர் அண்ணாமலை, ‘வி த லீடர்ஸ்’ என்ற புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கினார். இந்த புதிய மக்கள் இயக்கத்தை, எதிர்காலத்தில் ஒரு பிராந்திய அரசியல் கட்சியாக மாற்றவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, ஊழல் ஒழிப்பு, சாதி, வாரிசு அரசியலைத் தாண்டி, சாமானிய மக்களின் அரசியல், சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

தற்போது வரை இந்த இயக்கத்தில் சுமார் 18 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.

இந்த இயக்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை ஒரு கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்களும் நடைபெற்று வருகின்றன. அதேசமயம் இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்ததும், இது முறைப்படியான அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ‘வி த லீடர்ஸ்’ அமைப்பின் முதல் மாநில மாநாடு வரும் ஜூலை 12-ம்தேதி பொள்ளாச்சியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் விஜய்யை நேரடியாக அட்டாக் செய்து பேச அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்து வந்தது. அண்ணாமலையின் ஒரே இலக்கு விஜய்யாக தான் என்றும் விஜய் எப்படி ஸ்டாலினை டார்கெட் செய்தாரோ, அதேபோல் அண்ணாமலை விஜய்யை டார்கெட் செய்வார் என்பது போன்ற செய்திகள் ஊடகங்களில் கசிந்து வந்தது.

annamalai vijay
annamalai vijay

இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெற்ற ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அண்ணாமலை, தவெக அரசுக்கு மக்கள் ஓராண்டு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய்க்கு திடீரென ஆதரவாக பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயல்பாடுகள் மற்றும் புதிய அமைச்சரவை குறித்து முக்கியக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். தமிழகத்தில் புதிதாக அமையும் அரசு தங்களை முழுமையாக நிலைநிறுத்தி கொள்ள குறைந்தபட்சம் ஓராண்டு காலமாவது தேவைப்படும் என்று அவர் கூறியுள்ளார். எனவே, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு மக்கள் ஓராண்டு கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும், அதுவரை அவர்களுக்கு எந்தவிதமான தடைகளையும், முட்டுக்கட்டைகளையும் நாம் போடக்கூடாது என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.

மேலும், அமைச்சரவையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் குறித்துப் பேசிய அவர், புதிதாக வந்துள்ள அமைச்சர்களுக்குப் போதிய கால அவகாசம் கொடுக்காமல், அவர்களால் எப்படி உடனடியாகச் சிறப்பாகச் செயல்பட முடியும்? என்ற கேள்வியை எழுப்பினார். புதிய ஆட்சியில் புதிதாக அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பாதிபேர் கவுன்சிலராக கூட பதவி வகித்தது கிடையாது. அவர்களுக்கு போதிய கால அவகாசம் கொடுக்காமல் எப்படி அவர்களால் சிறப்பாக செயல்பட முடியும்.

இதையும் படியுங்கள்:
பொள்ளாச்சியில் தொடங்கும் புதுப்போர்! ‘வி த லீடர்ஸ்’ அண்ணாமலையின் டார்கெட் விஜய்யா..?
அண்ணாமலை

என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளவே அவர்களுக்கு 6 மாத காலம் ஆகும். எனவே புதியவர்கள் தங்களை நிரூபிக்க நியாயமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்பதே அவரது கருத்தாக இருந்தது.

ஊழலுக்கு எதிராகத் தான் தொடர்ந்து குரல் எழுப்புவேன் என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்த அவர், இதற்காகத் தனிப்பட்ட முறையில் பல்வேறு சட்ட ரீதியான வழக்குகளைத் தான் எதிர்கொண்டு சந்தித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், தவெக அரசு மக்களுக்கு நல்லது செய்தால், அதனை முதல் ஆளாக நின்று நாம் வரவேற்போம் என்று கூறினார். குறிப்பாக, ஊழலைக் கட்டுப்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நாம் மனப்பூர்வமாக வரவேற்போம் என்றும், மக்கள் நலனே தங்களுக்கு முக்கியம் என்றும் அண்ணாமலை அந்த நிகழ்வில் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதையும் படியுங்கள்:
#BREAKING : ஜூலை முதல் கதையே மாறப் போகுது.. அண்ணாமலை வெளியிட்ட திடீர் வீடியோ.!
அண்ணாமலை

தமிழக அரசியலில் சமீபகாலமாக நடந்து வரும் புதிய மாற்றங்கள் மற்றும் கூட்டணி கணக்குகள் குறித்த பல்வேறு விவாதங்கள் எழுந்து வரும்நிலையில், அண்ணாமலையின் இந்த உரை அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com