அண்ணாமலையில் ‘வி த லீடர்ஸ்’ அமைப்பின் 2-வது மாநாடு ரத்து..!!

அண்ணாமலையின் ‘வி த லீடர்ஸ்’ அமைப்பின் சார்பில் திருச்செந்தூரில் நடைபெறவிருந்த 2வது மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
அண்ணாமலை
அண்ணாமலை|அண்ணாமலை இயக்கம்image credit-indianexpress.com
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

அண்ணாமலையின் ‘வி த லீடர்ஸ்’ (We The Leaders)அமைப்பின் சார்பில் திருச்செந்தூரில் நடைபெறவிருந்த 2-வது மாநாடு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக, வரும் ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடியில் இயற்கை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை 'வீ த லீடர்ஸ்' (We The Leaders) என்ற புதிய சமூக மற்றும் அரசியல் இயக்கத்தை கடந்த ஜூன் மாதம் தொடங்கினார். சாதி, வாரிசு அரசியலைத் தாண்டி, மக்கள் மையமான மற்றும் தரவு சார்ந்த அரசியலை முன்னெடுக்கும் நோக்கத்துடன் இது உருவாக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை தமிழக அரசியல் போக்கு குறித்த தனது கருத்து வேறுபாடுகள் காரணமாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பின்னர் பாஜகவில் இருந்து விலகி, கடந்த ஜூன் மாதம் 5-ம்தேதி ‘வி த லீடர்ஸ்’ என்ற புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கினார். அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தில் தற்போது வரை சுமார் 19 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தாங்களாகவே முன்வந்து இணைந்துள்ளனர்.

தமிழகத்தில் மாற்றத்தை விரும்பும் மக்கள், அண்ணாமலை தொடங்கியுள்ள இயக்கத்துக்கு அதிக அளவில் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த இயக்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை ஒரு கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்களும் நடைபெற்று வருகின்றன. 18 மாதங்கள் வரை தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு அரசியல் பயிற்சி அளிக்க அண்ணாமலை முடிவு செய்துள்ளார். அதன் பிறகு புதிய கட்சியை தொடங்க உள்ளதாக ஏற்கனவே அண்ணாமலை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தின் முதல் மாநில மாநாடு கடந்த 12-ம்தேதி அன்று பொள்ளாச்சியில் போதையில்லா தமிழகம் என்ற பெயரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மாநாட்டில் பேசிய அண்ணாமலை,சேவை, மாற்றம் என்ற வார்த்தைகளில் நாம் இணைந்திருக்கிறோம்; சரியான நேரத்தில் 'We The Leaders' அமைப்பு அரசியல் கட்சியாக மாறும்.

அண்ணாமலை மாநாடு|அண்ணாமலை இயக்கம்
annamalai|அண்ணாமலை இயக்கம்image credit-newsbytesapp.com

நாம் எப்போதும் நாமாக இருப்போம், அதனால் தான் நம் அமைப்பிற்கு 'We The Leaders' என பெயர் வைத்துள்ளோம். 2026-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுபோல் 2031-லும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று அண்ணாமலை என்றார்.

‘We The Leaders’ அமைப்பு அடுத்த 6 மாத காலம் 6 முக்கிய பிரச்னைகளை எடுத்து பேச இருக்கிறோம்; அடுத்த 6 மாதம் நமக்கான இலக்கு தெள்ளத் தெளிவாக உள்ளது. நல்லவர்களுக்கு வாய்ப்பளிக்கவே இந்த மேடை உள்ளது என்றார். 38 நாட்களில் 19 லட்சம் பேர் இந்த அமைப்பில் இணைந்துள்ளனர்; இது என் குடும்ப கட்சி இல்லை. இந்த அமைப்பை பொறுத்தவரை நானும் ஒரு தன்னார்வலர் தான் என்றார். மேலும் ஜூலை 26-ம்தேதி தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு நடத்தப்படும் அன்றும் அறிவித்திருந்தார்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: அடுத்த தேர்தலில் நம் கட்சி நிச்சயமாக போட்டியிடும்! அண்ணாமலை அதிரடி.!
அண்ணாமலை

இந்நிலையில், தான் திருச்செந்தூரில் வரும் 26-ம்தேதி நடைபெறவிருந்த மாநாடு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்த அமைப்பில் எக்ஸ் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பு எக்ஸ் தளத்தில் பதிவில், ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பின் சார்பில் திருச்செந்தூரில் நடைபெறவிருந்த மாபெரும் பொதுக்கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக வரும் ஆகஸ்ட் மாதம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி, இயற்கை மற்றும் சுற்றுப்புற விழிப்புணர்வு சார்ந்த மாபெரும் சமூக நல நிகழ்வுகள் தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்தப்படவுள்ளன.

இதையும் படியுங்கள்:
தமிழ்நாட்டில் 2026-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது போல 2031லும் மாற்றம் ஏற்படும் - அண்ணாமலை..!
அண்ணாமலை

இந்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெறும் தேதி, இடம் குறித்த முழு விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com